Jannik Sinnerpt desk
டென்னிஸ்
சர்வதேச டென்னிஸ் தரவரிசை - முதலிடத்திற்கு முன்னேறிய இத்தாலி வீரர் ஜான்னிக் சின்னர்
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இத்தாலி வீரர் ஜான்னிக் சின்னர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
22 வயதே ஆன ஜான்னிக் சின்னர் கடந்த 54 ஆண்டுகளில் டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சின்னர் இந்த ஆண்டில் விளையாடிய 36 போட்டிகளில் 33ல் வெற்றி பெற்றுள்ளார். அண்மையில் முடிந்த ஃப்ரெஞ்ச் ஓபனில் அரையிறுதி வரை கார்லோஸ் அல்காரசிடம் சின்னர் தோல்வியடைந்தார்.
Iga Swiatekpt desk
இந்தாண்டில் ஆஸ்திரேலிய ஓபன் உள்ளிட்ட 3 தொடர்களில் பட்டங்களையும் சின்னர் வென்றுள்ளார். ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 2ஆம் இடத்திலும் செர்பியாவின் ஜோகோவிக் 3ஆம் இடத்திலும் உள்ளனர். பெண்கள் பிரிவில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.