2021-இல் அதிக சம்பளம் பெற்ற டாப் -10 விளையாட்டு வீராங்கனைகள் : முதலிடத்தில் நவோமி ஒசாகா

2021-இல் அதிக சம்பளம் பெற்ற டாப் -10 விளையாட்டு வீராங்கனைகள் : முதலிடத்தில் நவோமி ஒசாகா
2021-இல் அதிக சம்பளம் பெற்ற டாப் -10 விளையாட்டு வீராங்கனைகள் : முதலிடத்தில் நவோமி ஒசாகா

கடந்த ஆண்டு அதிக சம்பளம் பெற்ற விளையாட்டு வீராங்கனை என்ற அந்தஸ்தை எட்டியுள்ளார் ஜப்பான் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. இதனை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 57 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் ஈட்டியுள்ளார். உலக அளவில் கடந்த ஆண்டு அதிக சம்பளம் ஈட்டிய டாப்-10 விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. 

மற்றொரு டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 45.9 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் 11.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டி மூன்றாவது இடத்தில் உள்ளார். 

அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ், ஸ்பெயின் நாட்டின் டென்னிஸ் வீராங்கனை Garbine Muguruza, கோல்ஃப் வீராங்கனைகள் ஜின் யங் கோ மற்றும் நெல்லி கோர்டா ஆறு மற்றும் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஏழாவது இடம் இந்த பட்டியலில் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை Ashleigh Barty எட்டாவது இடம் பிடித்துள்ளார். அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை Candace Parker பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். மொத்தமாக பத்து பேரும் சேர்த்து 167 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com