டென்னிஸ் போட்டி: தோற்றதால் ஜெயித்தவர் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட வீடியோ

டென்னிஸ் போட்டி: தோற்றதால் ஜெயித்தவர் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட வீடியோ

டென்னிஸ் போட்டி: தோற்றதால் ஜெயித்தவர் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட வீடியோ

கானாவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் தோல்வியடைந்த 15 வயது சிறுவன் வெற்றி பெற்றவர் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கானாவில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சார்பில் ஜுனியர்ஸ் பிரிவில் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில் பிரான்சை சேர்ந்த மைக்கேல் கோமே மற்றும் ரபேல் நி அன்க்ரா ஆகிய இரு சிறுவர்கள் மோதினர். முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் மைக்கேல் எளிதாக கைப்பற்றினார். 2வது செட்டில் இருவரும் சளைக்காமல் விளையாட ஆட்டம் டை பிரேக்கர் வரை சென்றது. ஆனால் 6-7 என நூலிழையில் 2வது செட்டைப் பறிகொடுத்தார். 3வது மற்றும் கடைசி செட்டிலும் இருவரும் சரி நிகராக விளையாடியதால் இந்த செட்டும் டை பிரேக்கர் வரை சென்றது. இருப்பினும் 7-6 என்ற கணக்கில் அந்த செட்டை வென்று போட்டியிலும் வென்றார் மைக்கேல்.

வென்றதும் மரியாதை நிமித்தமாக வீரர்கள் கைகுலுக்கி பிரிவது வழக்கம். இதற்காக இருவரும் நெருங்கிவர, கை குலுக்க வந்த மைக்கேலின் கன்னத்தில் ரபேல் “பளார்” என்று அறைய அங்கு பதற்றம் ஏற்பட்டது. எதற்காக ரபேல் அடித்தார் என்பது தற்போது வரை தெரியவில்லை. மைதானத்தில் இருந்த இரு வீரர்களின் ஆதரவாளர்களும் கூச்சலிட  மைதானம் களேபரமானது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com