காதலியை இந்தாண்டு மணக்கிறார் நடால்?

காதலியை இந்தாண்டு மணக்கிறார் நடால்?

காதலியை இந்தாண்டு மணக்கிறார் நடால்?
Published on

உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரரான ரஃபெல் நடால் இந்த ஆண்டு தன் காதலியை மணக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்பெயின் டென்னிஸ் வீரரான ரஃபெல் நடால், மெரி பெரில்லா என்பவரை கடந்த 14 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், விரைவில் இருவரும்  திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோம் நகரில் கடந்த மே மாதம் தனது காதலை நடால் தெரிவித்ததாகவும், காதலை பெரில்லா ஏற்றுக்கொண்டதாகவும் பெய்ன் நாளிதழ் தெரிவித்துள்ளது. 

பெரில்லா நடாலின் அனைத்து ஆட்டங்களையும் நேரில் கண்டு களிப்பதில்லை என்றாலும் அவ்வப்போது டென்னிஸ் மைதானத்தில் தென்படுவார் என்றும் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடாலின் ஆட்டத்தை பெரில்லா கண்டுகளித்ததாகவும் கூறப்படுகிறது.

நடால் திருமணம் செய்யவுள்ள பெரில்லா, தொழில்முனைவில் பட்டம் பெற்றவர் ஆவார். நடாலின் பவுண்டேஷனில் அவர் திட்ட இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் நடாலின் சொந்த ஊரான மலோர்காவில் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒரு முறை நேர்காணல் ஒன்றில் பேசிய நடால், திருமணம் குறித்து தற்போது எதுவும் யோசிக்கவில்லை என்றும் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு திருமணம் குறித்து யோசிப்பேன் என்றும் தெரிவித்து இருந்தார். ஆனால் அவரது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக உள்ளூர் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த செய்தியை நடாலின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com