விளையாட்டு
மிதாலிராஜுக்கு ரூ.1 கோடியும் நிலமும்: பெருமைப்படுத்தியது தெலங்கானா
மிதாலிராஜுக்கு ரூ.1 கோடியும் நிலமும்: பெருமைப்படுத்தியது தெலங்கானா
இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜுக்கு தெலங்கானா அரசு ரூ.1 கோடியும், நிலமும் கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளது.
இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ், பெண்கள் கிரிக்கெட்டில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை. இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியை 2005 மற்றும் 2017 ஆகிய இரண்டு முறை உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்ற பெருமைக்குரியவர்.
மிதாலிராஜை பெருமைப்படுத்தும் விதமாக தெலங்கானா அரசு அவருக்கு ரூ.1 கோடியும், பஞ்சாரா மலைப்பகுதியில் 5400 சதுரடியில் நிலமும் கொடுத்துள்ளது. இந்தப் பரிசுகளை தெலங்கானா விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பத்மா ராவ் வழங்கினார். மேலும், மிதாலிராஜின் பயிற்சியாளர் ஆர்.எஸ்.ஆர்.மூர்த்திக்கும் ரூ.25 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.