6 பந்தில் 6 விக்கெட்: அசத்திய சிறுவன்!

6 பந்தில் 6 விக்கெட்: அசத்திய சிறுவன்!
6 பந்தில் 6 விக்கெட்: அசத்திய சிறுவன்!
Published on

6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 13 வயது சிறுவன் ஒருவன் சாதனை படைத்துள்ளான். அனைத்து விக்கெட்டும் கிளீன் போல்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் பிலடெல்பியா கிரிக்கெட் கிளப் சார்பில் 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. லாங்க்லே பார்க் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் லூக் ராபின்சன் (13) என்ற சிறுவன 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தான். அனைத்து விக்கெட்டுகளும் கிளீன் போல்டு என்பது குறிப்பிடத்தக்கது. லூக்கின் அப்பா ஸ்டீபன் (45) இந்தப் போட்டியில் நடுவராக செயல்பட்டார். தனது மகன் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதைப் பார்த்து ரசித்து பெருமைப்பட்டுள்ளார். 

இதுபற்றி ஸ்டீபன் கூறும்போது, ’முப்பது வருடமாக நானும் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருக்கிறேன். ஆனால் இதுபோன்று ஒரு போதும் நடந்ததில்லை’ என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com