\
இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி - தொடரை வென்று அசத்தல்

இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி - தொடரை வென்று அசத்தல்

இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி - தொடரை வென்று அசத்தல்
Published on

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான், கே.எல்.ராகுல் அரைசதம் விளாசினர்.

202 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி 26 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. அதனால், இலங்கை அணி விரைவில் ஆட்டமிழந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேத்யூஸ் மற்றும் தனஞ்ஜெயா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.

மேத்யூஸ் 31(20) ரன்களில் ஆட்டமிழந்த போது தனஞ்ஜெயா டி சில்வா அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில் இலங்கை அணி 15.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சைனி மூன்று விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், ஷர்குல் தாக்கூர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com