இந்தியா vs நியூசிலாந்து : முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு

இந்தியா vs நியூசிலாந்து : முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு
இந்தியா vs நியூசிலாந்து : முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

நியூசிலாந்து அணி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். 

வரும் 2022 வாக்கில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு அணியை தயார் செய்யும் வகையில் முற்றிலுமாக அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களை மாற்றி அமைத்துள்ளது இந்தியா. 

ஆடும் லெவன் விவரம்... 

நியூசிலாந்து!

மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், மார்க் சேப்மேன், க்ளென் பிலிப்ஸ், டிம் செய்ஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி (கேப்டன்), ஆஸ்டில், ஃபெர்குசன், டிரென்ட் போல்ட். 

இந்தியா!

ரோகித் ஷர்மா (கேப்டன்), கே. எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், முகமது சிராஜ். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com