பேட்டிங் பயிற்சியாளர் யார்? - வியாழன் அன்று முடிவு 

பேட்டிங் பயிற்சியாளர் யார்? - வியாழன் அன்று முடிவு 
பேட்டிங் பயிற்சியாளர் யார்? - வியாழன் அன்று முடிவு 

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சு உள்ளிட்ட பயிற்சியாளர்கள் தொடர்பான அறிவிப்பு வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர்கள் ஆகியவர்களின் பதவிக்காலம் கடந்த உலகக் கோப்பை தொடருடன் முடிந்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் பதவிகளுக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்றது. இதனையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையிலான குழுவை நியமித்தது. அந்தக் குழு நேர்காணல் நடத்தி இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியை தேர்வு செய்தது. 

இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் உள்ளிட்ட துறைகளுக்கான பயிற்சியாளர்களை இந்திய அணியின் தேர்வுக்குழு தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான குழு இதற்கான தேர்வை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இந்தப் பயிற்சியாளர்களின் தேர்வு முடிவு வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com