\
ஆஸ்திரேலியா சென்றது இந்திய அணி !

ஆஸ்திரேலியா சென்றது இந்திய அணி !

ஆஸ்திரேலியா சென்றது இந்திய அணி !
Published on

ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி சிட்னி சென்றடைந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 56 நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் திருவிழாவில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்றனர். பின்னர் அங்கிருந்து இந்திய அணி வீரர்கள் முழு பாதுகாப்புடன் ஆஸ்திரேலியாவின் சிட்னியை சென்றடைந்தனர். அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் வீரர்கள் பின்னர் பயிற்சியை தொடங்குகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 27 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இப்போட்டியில் 1990களில் இந்திய அணி வீரர்கள் அணிந்த ஜெர்சியை மீண்டும் அணியவுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com