விராட் கோலி ரெஸ்டாரண்டில் வீரர்களுக்கு ஸ்பெஷல் விருந்து..!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது ரெஸ்டாரண்டில், மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட சக வீரர்களுக்கு விருந்து அளித்தார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதனையடுத்து, இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டெல்லி பெரோஸ் ஷா காட்லா மைதானத்தில் இன்று நடக்கிறது. முதல் டி20 போட்டியையொட்டி கேப்டன் கோலி, டெல்லியில் உள்ள தனது ரெஸ்டாரண்டில் சக வீரர்களுக்கு நேற்று இரவு விருந்து அளித்தார். கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டனர்.
இந்த விருந்தில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஷிகார் தவன், அக்ஸர் பட்டேல், பும்ரா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டர். முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் இந்த விருந்தில் பங்கேற்றார். விருந்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை வீரர்கள் தங்களது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இன்று பதிவிட்டுள்ளனர்.