இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி: மெனுவால் வந்த சர்ச்சை!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி: மெனுவால் வந்த சர்ச்சை!
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி: மெனுவால் வந்த சர்ச்சை!

இங்கிலாந்தில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டுக் கறி வழங்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, லார்ட்ஸில் இரண்டாது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. இதிலும் நேற்று தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகளின் மெனுவை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இந்த மெனுவை பார்த்த ரசிகர்கள் சிலர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். ஏனென்றால்,சூப், கிறில்ட் சிக்கன், சிக்கன் டிக்கா கறி என செல்லும் அந்த மெனுவில் மாட்டுக்கறியும் இடம்பெற்றுள்ளது. ’இந்திய கிரிக்கெட் வீரர்கள் மெனுவில் மாட்டுக்கறி எப்படி வந்தது? என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்ப, சர்ச்சை கிளம்பி இருக்கிறது. 

இந்நிலையில் மாட்டுக்கறி சாப்பிட்டால் என்ன தவறு? என்றும் அதை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் சிலர் வகுப்பெடுத்துள்ளனர் அதில். ’இது இரண்டு அணியினருக்குமான மெனு. இந்திய வீரர்களுக்கு மட்டும் எப்படி தனியாக மெனு தயாரிக்க முடியும்?’ என்றும் சிலர் கேள்வி கேட்டுள்ளனர். 

ஏற்கனவே வடமாநிலங்களில் மாட்டுக்கறி பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுத்து அடங்கிய நிலையில் இப்போது கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப் பட்ட மாட்டுக்கறி உணவு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com