\
கைகளில் கருப்புப் பட்டையுடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள்

கைகளில் கருப்புப் பட்டையுடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள்

கைகளில் கருப்புப் பட்டையுடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள்
Published on: 

பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சியாளர் ராஜேஷ் சவந்த் மற்றும் முகமது ஷமியின் தந்தை ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்திய வீரர்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் உடற்பயிற்சியாளரான ராஜேஷ் சவந்த், மும்பையில் ஹோட்டல் அறையில் உயிரற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் தந்தை சமீபத்தில் மரணமடைந்தார். இவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நாக்பூரில் நடந்துவரும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர்கள் தங்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com