சவுத்தாம்டனில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்

சவுத்தாம்டனில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்
சவுத்தாம்டனில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டன் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் ஜூலை 18 முதல் 22 ஆம் தேதி வரை சவுத்தாம்டனில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி இம்மாதம் தனி விமானம் மூலம் சவுத்தாம்டன் சென்றது. அங்கு 7 நாள்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறையின் கீழ் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்திய அணியில் இருக்கும் யாருக்கும் கொரோனா இல்லை என உறுதியானது.

இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் நேற்று மைதானத்தில் தங்களது பயிற்சியை தொடங்கினர். மைதானத்தில் வார்ம் அப், பீல்டிங் மற்றும் வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இதில் இந்திய வீரர்களும் அனைவரும் உற்சாகமாக காணப்பட்டனர். இந்நிலையில் இங்கிலாந்தில் ஏற்கெனவே இருக்கும் நியூசிலாந்து வீரர்கள், அந்நாட்டுடன் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com