சென்னை ஓபன்: 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் டென்னிஸில் கலக்கும் தத்ஜானா மரியா!

சென்னை ஓபன்: 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் டென்னிஸில் கலக்கும் தத்ஜானா மரியா!
சென்னை ஓபன்: 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் டென்னிஸில் கலக்கும் தத்ஜானா மரியா!

இரண்டு குழந்தைகளுடன் சென்னை ஓபன் தொடரில் கலக்கிவருகிறார் வீராங்கணை தத்ஜானா மரியா.

சர்வதேச மகளிர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் முதல் முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது, இந்த தொடரில் பல்வேறு நாடுகளை சார்ந்த வீராங்கனைகள் சென்னை வந்துள்ள நிலையில் 35 வயதில் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ள ஜெர்மனி வீராங்கனை தத்ஜானா மரியா ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்துள்ளார்.

ஜெர்மனி நாட்டை சார்ந்த 35 வயதான வீராங்கனை தத்ஜானா மரியா கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டி வருகிறார், சர்வதேச ரேங்கிங் பட்டியலில் ஒற்றையர் பிரிவில் தற்போது 84வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் ப்ரெஞ்ச் ஓபன் தொடர்களில் ஒற்றையர் பிரிவில் தலா 2 முறை மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அமெரிக்கா ஓபன் தொடரில் 3 முறை மூன்றாம் இடம் பிடித்துள்ள தத்ஜானா மரியா இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் இந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் அரை இறுதி வரை முன்னேறி பார்ப்போரை ஆச்சர்யத்திற்குள் உள்ளாகினார் தத்ஜானா மரியா.

35 வயதில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் சென்னை ஓபன் தொடரில் பங்கேற்க வந்துள்ள தத்ஜினா, தொடர் துவங்குவதற்கு முன்னரே தன்னுடைய முதல் மகள் சரோலெட்டுடன் இணைந்து `எல்லாரும் என்னை support பண்ண வாங்க' என்பதை தமிழ் மற்றும் இந்தியில் பேசி வெளியிட்ட விடியோ பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

குடும்பமாக சென்னைக்கு வந்துள்ளதாகவும், தான் இந்த வயதிலும் டென்னிஸ் விளையாட தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவர் தொடர்ச்சியாக உதவி வருவதாக தெரிவித்த அவர் தன்னுடைய பெரிய மகள் மிக சிறப்பாக டென்னிஸ் விளையாடுவதாகவும் அவர் நிச்சயம் டென்னிஸ் தொடரில் மிக பெரிய ஆளாக மாறுவார் என தெரிவித்தார்.

இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள அங்கித்தா ரெய்னாவை 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி முதல் சுற்றில் அபார வெற்றியை பெற்றார் தத்ஜானா மரியா.

இவரது குழந்தையான சாரோலேட் பேசுகையில், “என்னுடைய அம்மா இன்று சிறப்பாக விளையாடினார். இன்று அவர் போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த போட்டியிலும் அவர் பெறுவார் என நம்பிக்கை உள்ளது. நானும் நன்றாக டென்னிஸ் விளையாடுவேன்” என தெரிவித்தார்.

சென்னை ஓபன் தொடரில் நான்காம் நிலை வீராங்கனையாக உள்ள தத்ஜானா மரியா, இந்த தொடரை வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில், தங்கள் கனவுகளை நோக்கி பயணம் செய்யும் நபர்கள் யாருக்கும் குழந்தைகளோ வயதோ தடை இல்லை என்பதற்கு சான்றாக நம் கண் முன் நிகழ்த்தி காட்டியுள்ளார் தத்ஜானா மரியா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com