டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கம் வெல்வோம் - ஒலிம்பிக் போட்டியில் தகுதிபெற்ற தமிழக வீரர்கள்!

டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கம் வெல்வோம் - ஒலிம்பிக் போட்டியில் தகுதிபெற்ற தமிழக வீரர்கள்!

டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கம் வெல்வோம் - ஒலிம்பிக் போட்டியில் தகுதிபெற்ற தமிழக வீரர்கள்!
Published on

இந்தியாவிற்காக டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கம் வெல்வோம் என, ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதிபெற்ற தமிழக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி தோகாவில் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர்கள் சத்தியன் ஞானசேகரன், சரத் கமல் ஆகியோர் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

இந்நிலையில் தோகாவிலிருந்து சென்னை வந்த இவர்களை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் வரவேற்று, வாழ்த்து தெரிவித்தனர்.

"முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதியடைந்துள்ளேன். சிறுவயது கனவு தற்போது நனவாகியுள்ளது. வெளிநாடுகளில் சென்று பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்" என்று சத்தியன் ஞானசேகரன் கூறியுள்ளார். “4ஆவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளேன். ஒலிம்பில் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது” என்று சரத் கமல் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com