விளையாட்டு
தமிழக விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி
தமிழக விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி
தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் “தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும். 15 வயதுக்கு உட்பட்டோர் 50 வயதிற்கு மேற்பட்டோர் பயிற்சி மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களில் பயிற்சி மேற்கொள்வதற்கு மறு உத்தரவு வரும் வரை தடை தொடர்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.