புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி ஐந்தாவது வெற்றியை ஈட்டியது.
புரோ கபடி லீக் தொடர் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைப்பெற்று வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் - யுனைடெட் மும்பை அணியும் மோதின. விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் யுனைடெட் மும்பை அணியை மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோற்கடித்தது. கடைசி கட்டத்தில் கேப்டன் அஜய் தாக்கூர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ் தலைவாஸ் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அஜய் தாக்கூர் இந்தப்போட்டியில் 16 புள்ளிகளை எடுத்தார். தமிழ் தலைவாஸ் அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.