தமிழ் தலைவாஸ்-க்கு முதல் வெற்றி

தமிழ் தலைவாஸ்-க்கு முதல் வெற்றி

தமிழ் தலைவாஸ்-க்கு முதல் வெற்றி
Published on

புரோ கபடி லீக் தொடரில் தமிழ்‌ தலைவாஸ் அணி முதல் வெற்றிக் கணக்கை தொடங்கியது.

நாக்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. சவால் மிகுந்த ஆட்டத்தின் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 12-8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் கடும் போட்டி நிலவியது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அணி 29-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. தமிழக தலைவாஸ் அணியில் இடம்பெற்றுள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபஞ்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

முன்னதாக நடைபெற்ற போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி, புனேரி பல்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பு மிகுந்த போட்டியில் ஜெய்ப்பூர் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜெய்ப்பூர் அணி ஐந்தாவது சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com