3 போட்டிகளில் 3 சதம்: தேர்வாளர்கள் கண்களில் படுவாரா தமிழக வீரர் பாபா இந்திரஜித்!
இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது ரஞ்சிக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் வீரரான பாபா இந்திரஜித் தொடர்ச்சியாக அவர் விளையாடிய கடைசி மூன்று போட்டிகளில் மூன்று சதம் விளாசி தனது அபார திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது ஜார்கண்ட் அணிக்கு எதிராக 132 பந்துகளில் சதம் விளாசியுள்ளார் அவர். முன்னதாக சத்தீஸ்கர் மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிரான போட்டியிலும் முறையே 127 மற்றும் 117 ரன்கள் எடுத்திருந்தார் அவர். மொத்தம் இதுவரை இந்த சீசனில் 344 ரன்கள் எடுத்துள்ளார் அவர்.
தமிழ்நாடு அணி ‘H’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளையும் டிரா செய்துள்ளது. அதனால் தற்போது ‘H’ பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தனது கடின உழைப்புக்கு கிடைத்த பலனாக இதை பார்ப்பதாக மூன்றாவது சதம் விளாசிய பிறகு தெரிவித்துள்ளார் பாபா இந்திரஜித்.

