\
டோக்கியோ ஒலிம்பிக்: நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தகுதி

டோக்கியோ ஒலிம்பிக்: நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தகுதி

டோக்கியோ ஒலிம்பிக்: நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தகுதி
Published on

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் நீச்சல் பிரிவில் பங்கேற்க இந்திய வீரர் சஜன் பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நெய்வேலியில் தனது பள்ளிப் படிப்பை பெற்றுள்ள சஜன் பிரகாஷ், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சியின் விளையாட்டுப் பயிற்சிக் குழுவில் ஆரம்பக் கட்ட நீச்சல் பயிற்சியை பெற்றவர். அங்குள்ள நீச்சல் குளத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்ட சஜன் பிரகாஷ், தொடர்ந்து நீச்சல் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளார். டோக்யோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்க அவர் ஜப்பான் செல்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com