விளையாட்டு
ஆசிய ஆன்லைன் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் : தமிழக வீரர் அசத்தல்!
ஆசிய ஆன்லைன் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் : தமிழக வீரர் அசத்தல்!
ஆசிய அளவிலான ஆன்லைன் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான்.
Men’s Trap ஈவெண்ட்டில் அவர் வெண்கலம் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆறு சுற்றுகளில் மொத்தமாக 143 புள்ளிகளை அவர் பெற்றார். அதுமட்டுமல்லாது இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 24 துப்பாக்கி சுடுதல் வீரர்கள் பங்கேற்றனர். அதில் 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல், ஏர் ரைபிள், மென்ஸ் டிராப், வுமன்ஸ் டிராப் பிரிவுகளில் இந்திய வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.
கடந்த மாதம் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் பிருத்விராஜ் CLAY PIGEON TRAP MEN T2 பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.