\
சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 10வது முறையாக வென்று தமிழக வீரர் சாதனை

சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 10வது முறையாக வென்று தமிழக வீரர் சாதனை

சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 10வது முறையாக வென்று தமிழக வீரர் சாதனை
Published on

சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரை 10வது முறையாக வென்று தமிழக வீரர் சரத் கமல் சாதனை படைத்துள்ளார்.

83ஆவது தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர், மேகாலயாவின் ஷில்லாங் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் தமிழக வீரர்கள் சரத் கமல் மற்றும் சத்யன் ஞானசேகரன் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 39 வயதான சரத் கமல் 4-3 என்ற செட் கணக்கில் சத்யன் ஞானசேகரனை வீழ்த்தி 10ஆவது முறையாக தொடரை வென்றார். சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வாவிற்கு, இந்த வெற்றியை சமர்ப்பணம் செய்வதாக சரத் கமல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கேட்ச்சை அல்ல; மேட்ச்சை ட்ராப் செய்திருக்கிறீர்கள் - மோசமான ஃபீல்டிங்கால் சொதப்பிய சிஎஸ்கே

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com