“அஸ்வின்..நடராஜன்..சுந்தர்”ஆஸ்திரேலிய தொடரில் கெத்து காட்டிய தமிழக வீரர்கள்!

“அஸ்வின்..நடராஜன்..சுந்தர்”ஆஸ்திரேலிய தொடரில் கெத்து காட்டிய தமிழக வீரர்கள்!
“அஸ்வின்..நடராஜன்..சுந்தர்”ஆஸ்திரேலிய தொடரில் கெத்து காட்டிய தமிழக வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை திருப்திகரமாக நிறைவு செய்துள்ளது. 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் என்ற இந்த நீண்ட நெடும் தொடரில் ஒருநாள் தொடரை இழந்திருந்தாலும் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று அசத்தியுள்ளது. அதிலும் தமிழகத்தை சேர்ந்த அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் தங்கராசு நடராஜனின் பர்பாமென்ஸ் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்துள்ளது. 

அஷ்வின்

ஆல் ரவுண்டரான அஷ்வின் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான டெஸ்ட் தொடரில் அஷ்வினின் பங்களிப்பு கொஞ்சம் அதிகம். மூன்று போட்டிகளில் விளையாடிய அஷ்வின் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரின் அஷ்வினின் பவுலிங் ஆவரேஜ் 28.83. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் அஸ்திவாரமான ஸ்மித்தை ஆட்டம் காண செய்தது அஷ்வினின் பவுலிங். இந்த தொடரில் ஸ்மித்தை மூன்று முறை வீழ்த்தியுள்ளார் அஷ்வின். 

அதே போல சிட்னி டெஸ்ட் போட்டியில் விஹாரியுடன் கூட்டணி அமைத்து அயலகத்தில் இந்தியாவின் மானம் காத்த வீரராக அவதரித்தார் அஷ்வின். 128 பந்துகளில் 39 ரன்களை சேர்த்து போட்டியை டிரா செய்தார் அஷ்வின். கடுமையான முதுகு வலியை தாங்கிக் கொண்டு விளையாடினார் அஷ்வின் என்பதும் குறிப்பிடத்தக்கது. மெல்பேர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற காரணமாக அமைந்ததும் அஷ்வினின் பவுலிங் தான். மொத்தமாக அந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை அள்ளியிருந்தார். 

அதே போல சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்த்தை போரில் ஈடுபட்ட போதும் அதை கூலாக ஹேண்டில் செய்தார் அஷ்வின். இந்திய அணியின் டெஸ்ட் வெற்றியில் துருப்பு சீட்டாக செயல்பட்டவர் அஷ்வின்.

வாஷிங்டன் சுந்தர்

இந்தியாவுக்காக 26 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளவர் வாஷிங்டன் சுந்தர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி இருந்தார். ஆல் ரவுண்டரான இவர் டி20 தொடரின் முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய மொத்தமாக 16 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். மூன்றாவது டி20 போட்டியில் ஸ்மித் மற்றும் ஃபின்ச் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். தனது பணி முடிந்த பிறகும் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவில் தங்கி இருந்தார் வாஷி. 

டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் தொடர்ந்து  காயமடைந்து வந்தனர். மூன்றாவது போட்டியில் ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயம் நான்காவது டெஸ்ட் போட்டியில் வாஷியை அறிமுக வீரராக களம் இறங்க செய்தது. 

காபா சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவது அரிதினும் அரிது. அதுமாதிரியான மைதானத்தில் முதல் நாளன்றே டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேனான ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார். இது அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டும் கூட. அதே இன்னிங்ஸில் கேமரூன் கிரீன் மற்றும் நாதன் லயன் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்த வாஷி தாக்கூருடன் கூட்டணி அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தியதோடு 29 பந்துகளில் 22 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். 

நடராஜன்

சேலம் - சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் இந்த ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் அறிமுக வீரராக களம் இறங்கி அசத்தியுள்ளார். முதலில் நெட் பவுலராக அணியில் இடம்பெற்ற நட்டு ஆடும் லெவனில் விளையாட தேர்வானதெல்லாம் வரலாறு. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி தான் நடராஜன் விளையாடிய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி. ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷேன் தான் நடராஜனின் முதல் சர்வதேச கிரிக்கெட் விக்கெட். லபுஷேனை க்ளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். 

தொடர்ந்து மூன்று டி20 போட்டிகளிலும் நடராஜன் விளையாடினார். அதில் ஆறு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இடது கை பந்து வீச்சாளரான நடராஜன் துல்லியமாக பந்துவீசி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கிலி ஊட்டினார். டெஸ்ட் தொடருக்கான அணியின் நெட் பவுலராக நடராஜன் சேர்க்கப்பட்டிருந்தாலும் வீரர்களின் காயம் நடராஜனுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுத்தது. காபா டெஸ்டில் மொத்தமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார் நடராஜன். 

“ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. எனக்கு இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. நெட் பவுலராக இருந்து முடித்து விட்டு செல்லலாம் என்று தான் நினைத்தேன். வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப… ரொம்ப சந்தோஷமா இருக்கு” என நடராஜன் சொல்லி இருந்தார்.

கலக்குங்க பாய்ஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com