இந்தியாவில் 100 கிராண்ட் மாஸ்டர்ஸ்.. அதிக எண்ணிக்கையுடன் தமிழ்நாடு நம்பர் 1! மற்ற மாநிலங்கள் எங்கே?
இந்தியாவின் 100ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக மத்திய பிரதேசத்தை சேர்ந்த அனுஜ் ஸ்ரீவாத்ரி உருவாகியுள்ளார். இந்தியாவில் 38 கிராண்ட் மாஸ்டர்களுடன் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மஹாராஷ்ட்ரா, மேற்குவங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவின் 100ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார் மத்திய பிரதேச மாநிலத்தின் அனுஜ் ஸ்ரீவாத்ரி. இந்நிலையில் இந்தியாவில் எந்தெந்த மாநிலங்கள் இருந்து எவ்வளவு கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர் என்பதை பார்க்கலாம்...
செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து என்பது மிகவும் உயர்ந்த நிலையாகும். சர்வதே செஸ் கூட்டமைப்பு இந்த அந்தஸ்தை வழங்குகிறது. தற்போது இந்தியாவில் 100 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ள நிலையில் அதில் 38 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து மஹாராஷ்ட்ராவிலிருந்து 14 பேர் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளனர். 12 கிராண்ட் மாஸ்டர்களுடன் இப்பட்டியலில் மேற்குவங்கம் 3ஆம் இடம் வகிக்கிறது.
தலைநகர் டெல்லியிலிருந்து 8 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். ஆந்திராவிலிருந்து 7 பேரும் கர்நாடகாவில் இருந்து 5 பேரும் தெலங்கனாவில் இருந்து 4 பேரும் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்றுள்ளனர்.
கேரளத்திலிருந்து 3 கிராண்ட் மாஸ்டர்கள் உருவான நிலையில் குஜராத், ஒடிஷா, கோவாவில் இருந்து தலா 2 பேர் அச்சிறப்பை பெற்றுள்ளனர். அஸாம், ஹரியாணா, மத்திய பிரதேசத்திலிருந்து தலா ஒருவர் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்றுள்ளனர்.

