\
கழட்டிவிட்ட CSK - தொடர்ந்து 5 சதமடித்து அசத்திய தமிழக வீரர் ஜெகதீசன்!

கழட்டிவிட்ட CSK - தொடர்ந்து 5 சதமடித்து அசத்திய தமிழக வீரர் ஜெகதீசன்!

கழட்டிவிட்ட CSK - தொடர்ந்து 5 சதமடித்து அசத்திய தமிழக வீரர் ஜெகதீசன்!
Published on

விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்கள் விளாசி அசத்தியுள்ளார் தமிழக வீரர் ஜெகதீசன்.

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தமிழக கிரிக்கெட்  அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து தமிழக அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5-வது சதத்தை பூர்த்திச் செய்தார் ஜெகதீசன். 114 பந்துகளில் தனது இரட்டை சதத்தைக் கடந்து மற்றொரு வரலாற்று சாதனையும் பதிவு செய்துள்ளார் அவர். முன்னதாக, ஆந்திர அணிக்கு எதிராக 114 ரன்கள், சத்தீஸ்கருக்கு எதிராக 107 ரன்கள், கோவாவுக்கு எதிராக 168 ரன்கள், ஹரியானாவுக்கு எதிராக 128 ரன்கள் என தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசியிருந்த ஜெகதீசன், இன்று அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடியபோது 277 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.

அண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெகதீசனை வெளியேற்றிய நிலையில், தற்போது வரலாற்று சாதனை படைத்து கவனம் ஈர்த்திருக்கிறார்.  இதுவரை இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த குமார் சங்கக்கார, தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த பீட்டர்சன், இந்திய அணியைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடர்ச்சியாக நான்கு சதங்களை மட்டுமே அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com