5,345 மீட்டர் உயர லடாக் சிகரத்தைத் தொட்டு சாதனை படைத்த தமிழக மாணவி
இந்திய அளவில் மலையேறுதல் போட்டியில் பங்கேற்று 5,345 மீட்டர் உயரமுள்ள லடாக் சிகரத்தை தொட்டு சாதனை படைத்த தமிழக மாணவிக்கு அவர் சொந்த ஊரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையத்தை சேர்ந்த ராஜா வைரமணி தம்பதியின் மகள் காயத்ரி, கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். கல்லூரியில் என்சிசி படையிலுள்ள காயத்ரி, இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில், கூடாரம் அமைத்தல், ரிவர் கிராசிங், தடை தாண்டுதல், மலையேற்றம் உள்ளிட்டவைகளில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து, ஹிமாச்சலப் பிரதேசம், லடாக் சிகரத்தில் ஏற, காயத்ரிக்கு 20 நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடுமையான பனிப்பொழிவையும் தாண்டி 17,825 அடி உயரத்தில் உள்ள லடாக் சிகரத்தைத் தொட்டு சாதனை படைத்தார். மலையேறுதல் மட்டுமின்றி ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்டவைகளிலும் தங்கப் பதக்கம் வென்ற காயத்ரி, அரசு ஊக்கமளித்தால் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கிலும் விளையாடுவேன் என்கிறார்.