சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உலக மல்யுத்தப் போட்டிக்கான தொடரை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ள காஜிபெளலி உள்விளையாட்டு அரங்கில் ‘சூப்பர்ஸ்டார் ஸ்பெக்கடல்’ என்கிற பெயரில் மல்யுத்த போட்டி நடைபெறுகிறது. இதில் ஜான் சீனா உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடிகர் கார்த்தி, ஜான் சீனாவை சந்தித்துள்ள புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்த்துள்ளார்.
அதில் 'உங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி' எனவும் 'மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி' எனவும் தெரிவித்துள்ளார். இந்த உலக மல்யுத்தப் போட்டிக்கான இந்திய விளம்பரத் தூதர் நடிகர் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இருவரும் சந்தித்த வீடியோவையும் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.