இந்தாண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர், வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான தூதர்களாக மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் நட்சத்திரம் கிறிஸ் கெயில், ஓட்டப்பந்தய ஜாம்பவான் உசைன் போல்ட் ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் தற்போது, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங்கையும் தொடருக்கான தூதராக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், "இதுவரை நடைபெற்ற இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர்களை விட இந்தாண்டு நடைபெறவுள்ள தொடர் பெரியதாக அமையவுள்ளது. இத்தொடரில் பங்கு வகிப்பது உற்சாகமளிக்கிறது. அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறவுள்ளன. கிரிக்கெட் வளர்ச்சியில் பங்கு வகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.