டி20 மும்பை லீக் இறுதிப் போட்டி | கோப்பை வெல்வாரா ஸ்ரேயாஸ் ஐயர்?
2025 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிவரை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது மும்பை டி20 லீக்கில் சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெரும் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணி, சித்தேஷ் லாட் தலைமையிலான மும்பை தெற்கு மத்திய அணியை எதிர்த்து விளையாடுகிறது.
கோப்பை வெல்வாரா ஸ்ரேயாஸ் ஐயர்?
பரபரப்பாக தொடங்கிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தெற்கு மத்திய அணி பவுலிங்கை தேர்வுசெய்ய சோபோ மும்பை அணி பேட்டிங் செய்துவருகிறது.
தொடக்க வீரராக களமிறங்கிய ரகுவன்சி சொற்ப ரன்னில் வெளியேற, அடுத்துவந்த முல்சந்தனி மற்றும் பல்கல் இருவரும் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என அடித்து ரன்களை எடுத்துவந்தனர். ஆனால் அடுத்தடுத்து அவர்களும் அவுட்டாகி வெளியேற சோபோ மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.
ஸ்ரேயஸ் ஐயர் 12 ரன்னில் ஏமாற்ற மயுரெஷ் தண்டெல் 50, ஹர்ஷ் ஆகவ் 45 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல்லில் கோப்பையை தவறவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர் விட்டதை இங்கு பிடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.