SA20 | SA20 ஏலத்தில் ராபின் உத்தப்பா, நஷீம் ஷா, கேன் ரிச்சர்ட்சன்..!

ராபின் உத்தப்பா ஏலத்தில் எடுக்கப்பட்டால், SA20 தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் என்ற பெயர் பெருவார்.
Robin Uthappa
Robin Uthappa twitter

2024 SA20 சீசனுக்கான ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பங்கேற்கப்போகிறார். ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் வெள்ளிக் கிழமை வெளியாகியிருக்கும் நிலையில், உத்தப்பா, கேன் ரிச்சர்ட்சன், காலின் டி கிராந்தோம், நஷீம் ஷா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பலரும் இந்த ஏலத்தில் பங்கேற்கப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தென்னாப்பிரிக்காவின் டி20 தொடரான SA20 கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 6 நகரங்களை மையமாகக் கொண்ட அணிகள் அனைத்தையும் இந்தியாவின் ஐபிஎல் அணிகளே வாங்கின. பரபரப்பாக நடந்த முதல் சீசனின் இறுதிப் போட்டியில் பிரிடோரியா கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

தென்னாப்பிரிக்கவில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் 2024ம் ஆண்டு ஜனவரி 10 முதல் பிப்ரவரி 10 வரை நடக்கிறது. இந்தத் தொடருக்கு முன்பாக, ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணியும் பல முன்னணி வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்தன. சூப்பர் கிங்ஸ் குழுமத்தின் அணியான ஜோஹன்னெஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ், ஃபாஃப் டுப்ளெஸி, ஜெரால்ட் கொட்சியா, மொயின் அலி, டேவிட் வீஸா, சேம் குக், ஜாஹிர் கான் ஆகியோரை ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் இந்த இரண்டாவது சீசனுக்கான ஏலம் செப்டம்பர் 27ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலையும் இப்போது வெளியிட்டிருக்கிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம்.

இந்த ஏலத்தில் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா பங்கேற்கவிருக்கிறார். 2022ம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த உத்தப்பா, ஐஎல்டி20, ஜிம்ஆஃப்ரோ டி10, US மாஸ்டர்ஸ் டி10 என பல வெளிநாட்டு லீகுகளில் பங்கேற்றார். இப்போது இந்த சீசனுக்கான ஏலத்துக்கு பெயர் கொடுத்திருக்கும் அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டால், SA20 தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் என்ற பெயர் பெருவார். கடந்த சீசனில் எந்த இந்திய வீரரும் இத்தொடரில் பங்கேற்கவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் ஃபேவரிட் வீரர்களுள் ஒருவரான உத்தாப்பாவை, ஜோஹன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் நிர்வாகமே ஏலத்தில் எடுக்கக்கூடும். அவருக்கு 37 வயது ஆகியிருந்தாலும், சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துக்கு வயது எப்போதும் ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. தங்கள் மேஜர் லீக் கிரிக்கெட் அணியான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸுக்காக அம்பதி ராயுடுவைக் கூட அந்த அணி ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் பிசிசிஐ விதிமுறைகளால் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் ஃபேவரிட் வீரர்களுள் ஒருவரான உத்தாப்பாவை, ஜோஹன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் நிர்வாகமே ஏலத்தில் எடுக்கக்கூடும். அவருக்கு 37 வயது ஆகியிருந்தாலும், சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துக்கு வயது எப்போதும் ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. தங்கள் மேஜர் லீக் கிரிக்கெட் அணியான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸுக்காக அம்பதி ராயுடுவைக் கூட அந்த அணி ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் பிசிசிஐ விதிமுறைகளால் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

உத்தப்பா தவிர பல முன்னணி சர்வதேச வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கவிருக்கிறார்கள். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் காலின் டி கிராந்தோம், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நஷீம் ஷா, வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமேரியோ ஷெபர்ட், முன்னாள் இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரும் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களுள் நஷீம் ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். 20 வயதே ஆன அவர், ஷஹீன் அஃப்ரியோடு இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களை பந்தாடிக்கொண்டிருக்கிறார். கடந்த SA20 தொடரில் எந்த பாகிஸ்தான் வீரர்களும் பங்கேற்கவில்லை. அந்தத் தொடர் நடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்து எதிராக விளையாடியது.

Robin Uthappa
Asian Games 2023 : இந்திய அணிகளுக்கு விவிஎஸ் லட்சுமண், ரிஷிகேத் கனித்கர் பயிற்சியாளர்கள்.

இதில் வேடிக்கை என்னவெனில் இந்த SA20 சீசன் நடக்கும்போது தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. கடந்த சீசன் இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் இருந்ததால், SA20 தொடருக்கு இடையில் 10 நாள்கள் இடைவெளி விடப்பட்டிருந்தது. இம்முறை அப்படி இரு பாதிகளாக நடத்தாமல் இருக்க நியூசிலாந்து நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டது தென்னாப்பிரிக்க நிர்வாகம். அவர்கள் மறுக்கவே, அந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் இல்லாமல் தென்னாப்பிரிக்க அணி பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com