WPL FINAL| 2 முறை இறுதிப்போட்டியில் தோல்வி.. முதல் கோப்பையை கைப்பற்றுமா டெல்லி!
2025 மகளிர் பிரீமியர் லீக் தொடரானது ஏப்ரல் 14-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
பரபரப்பாக தொடங்கி நடைபெற்றுவந்த WPL தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கோப்பையை வெல்வதற்கான ரேஸில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ் 5 அணிகள் போராடிய நிலையில், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2 முறை இறுதிப்போட்டியில் தோற்ற டெல்லி..
2025 மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டியானது மும்பையில் இருக்கும் பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கி நடக்கவிருக்கிறது. இந்த இறுதிப்போட்டியில் இரண்டாவது கோப்பையை வெல்ல மும்பை இந்தியன்ஸ் அணியும், முதல் கோப்பையை வெல்ல டெல்லி கேபிடல்ஸ் அணியும் களம்காண்கின்றன.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியை பொறுத்தவரையில், அறிமுக சீசனான 2023 மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி முதல் கோப்பையை வென்று அசத்தினர்.
டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியை பொறுத்தவரையில், கேப்டன் மெக் லானிங் தன்னுடைய சிறப்பான கேப்டன்சி மூலம் அணியை 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார். 2023 WPL இறுதிப்போட்டியில மும்பைக்கு எதிராக தோல்வியை கண்ட டெல்லி அணி, 2024 WPL இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக ஒரு இதயம் உடைக்கும தோல்வியை சந்தித்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில தோற்று வெளியேறியது.
இந்த சூழலில் 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கும் மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி,அ தங்களுடைய முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
2023 மகளிர் ஐபிஎல்லின் ஃபைனலில் இதே பிரபோர்ன் மைதானத்தில் தான் மார்ச் 26-ஆம் தேதி மும்பைக்கு எதிராக தோல்வியை சந்தித்தது டெல்லி அணி. மீண்டும் அதே இடத்தில் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.