kasi Viswanathan-MS Dhoni
kasi Viswanathan-MS DhoniPT desk, CSK Twitter

தோனி இடத்தை அடுத்து நிரப்பப் போவது யார்? - சென்னை அணி சிஇஓவின் தரமான பதில்!

தோனி தலைமையிலான சென்னை அணி 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
Published on

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. அப்போது போட்டிக்குப் பின்பு பேசிய தோனி, ஓய்வு குறித்து எழுப்பிய கேள்விக்கு, இன்னொரு 9 மாதங்கள் கடினமான பயிற்சிகள் மேற்கொண்டு இன்னுமொரு சீசன் விளையாடி விட வேண்டும் என்று தோன்றினாலும், இந்த முடிவுக்கு தனது உடல் ஒத்துழைக்க வேண்டும் எனவும், அதுகுறித்து முடிவெடுக்க இன்னும் ஏழு மாதங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனால், தோனியின் ஓய்வு குறித்து முழுமையான முடிவு தெரியவில்லை என்றே கூறலாம். இந்நிலையில், தோனியின் இடத்தை அடுத்து நிரப்பப்போவது யார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன், அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும், உங்களுக்கு எவ்வாறு கோப்பையை வென்றப்போது மகிழ்ச்சி இருந்ததோ, அதேபோல் தான் தனக்கும் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com