”ஐபிஎல் தொடரில் தோனியை வெல்ல இங்கு யார்?” - ஹர்பஜன் சிங்கின் பதிவை வைரலாக்கும் சென்னை ரசிகர்கள்!

ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் தொடர் வெற்றிக்குக் காரணம் கேப்டன் தோனிதான் என எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹர்பஜன் சிங்கின் பதிவு, சென்னை ரசிகர்களிடையே அதிகமாய் பகிரப்பட்டு வருகிறது.
Dhoni
DhoniKunal Patil

ஐபிஎல் சீசன்16வது திருவிழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். முதல் போட்டியில் தோற்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலிலும் முன்னேறி வருகிறது. இந்த வெற்றிக்குக் காரணம் கேப்டன் தோனிதான் என எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சொல்லியிருப்பதுதான் சென்னை ரசிகர்களுக்கு தெம்பாக இருக்கிறது. அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், "தல தோனி ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்து தடுத்தாலும் அது தவிடுபொடிதான்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்file image

குதியாட்டம் போடுற எதிர் டீமுக்கு முன்னாடி பேட்டைக்காளியா நின்னு சம்பவம் செஞ்சு இந்த சென்னை அணிக்கு தாயும்.. தகப்பனும்மா அவர் இருக்கும்போது. ஐபிஎல் தொடரில் இவனை வெல்ல எவன் இங்கு" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று (ஏப்ரல் 8) மும்பையில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சென்னை அணியின் வெற்றிக்கு ரஹானே பேட்டிங் கைகொடுத்தது. அவர், 27 பந்துகளில் 61 ரன்கள் சென்னை அணியை வெற்றிபெற வைத்தார்.

சென்னை அணி வெற்றிக்குப் பிறகு கேப்டன் தோனியிடம், சி.எஸ்.கேவுக்கு வரும் வீரர்கள் எப்படிச் சிறப்பாக செயல்படுகிறார்கள் (அதாவது ரஹானேவை மனதில்வைத்து) என வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தோனி, ”சீசன் தொடங்குவதற்கு முன்பு நான் ரஹானேவிடம் பேசினேன். ’உன்னுடைய பேட்டிங் பலத்திற்கு ஏற்ப விளையாடு.

MS Dhoni
MS DhoniPTI

உன்னுடைய திறமையை பயன்படுத்தி ஃபீல்டர்களை குழப்பி ரன்களை எடு. எந்த நெருக்கடியும் இல்லாமல் இந்த சீசனை மகிழ்ச்சியுடன் அணுகு. கொஞ்சம்கூட அழுத்தத்தை எடுத்துக்கொள்ளாதே. எப்போதும் நாங்கள் உன்னை ஆதரிப்போம்’ என்று உறுதியளித்தேன். அவர் சிறப்பாக விளையாடி எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துவிட்டார்” என்றார்.

இதுகுறித்து ரஹானே, “இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே தோனி என்னிடம் என்னை முழுமையாக தயார்படுத்திக்கொள்ள சொன்னார். அதேபோல், ’இந்தப் போட்டிக்கு முன்பும் எதைப் பற்றியும் கவலையில்லாமல், உங்களுக்குப் பிடித்தவாறு விளையாடுங்கள்’ என சொல்லித்தான் என்னை களத்திற்குள் அனுப்பினார்” என்று தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com