ஐபிஎல் இறுதிப் போட்டி: சிஎஸ்கே Vs குஜராத் டைட்டன்ஸ் - மழையால் ஆட்டம் பாதித்தால் என்னவாகும்?

இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே - லக்னோ அணிகள் இடையே நடைபெற இருந்த ஒரு லீக் போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ்,
சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ்,IPL Page

சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று அகமதாபாதில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ்,
CSKvGT | சென்னைக்கு ஐந்தாவது கோப்பையா இல்லை குஜராத்துக்கு இரண்டாவது கோப்பையா..?

இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே - லக்னோ அணிகள் இடையே நடைபெற இருந்த ஒரு லீக் போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. மேலும் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த குவாலிபையர் 2 போட்டி தொடங்கும் முன் மழை பெய்தது. ஆனாலும் போட்டி தாமதமாக தொடங்கப்பட்டு முழுவதுமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், அகமதாபாத்தில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியின் போது மழை குறுக்கீடு இருக்குமா? அப்படி மழை பெய்து போட்டி பாதிக்கபட்டால் என்ன நடக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Gujarat Titans captain Hardik Pandya with Chennai Super Kings captain MS Dhoni
Gujarat Titans captain Hardik Pandya with Chennai Super Kings captain MS DhoniR Senthil Kumar

அகமதாபாதில் இன்று மழை பெய்ய 50 சதவீதத்திற்கு மேல் வாய்ப்பு உள்ளது என என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. ஒருவேளை இறுதிப்போட்டியின் போது மழை குறுக்கிட்டு ஆட்டம் கைவிடப்பட்டாலும் ரிசர்வ் நாள் உண்டு. மழை குறுக்கிட்டு போட்டி தாமதமாக தொடங்கப்பட்டால் போட்டியை தொடங்கி முடிக்க கூடுதலாக 2 மணிநேரம் உள்ளது. எனவே, ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கான கட் ஆஃப் நேரம் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்கினால், நள்ளிரவு 11.56 ஆட்டம் நடக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கினால், கட் ஆஃப் நேரம் அதிகாலை 12:26 வரை இருக்கும்.

23.56 மணி வரை முடிந்த அளவிற்கு 5 ஓவர்கள் போட்டியை ஆவது நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும். அப்படி ஒரு பந்துகூட வீச முடியாத அளவிற்கு மழை வந்தால் போட்டி ரிசர்வ் டேவிற்கு அதாவது நாளைக்கு ஒத்தி வைக்கப்படும்.

ரிசர்வ் நாளிலும் மழை குறுக்கிட்டு போட்டி நடத்த முடியாத சூழல் வந்தால் சூப்பர் ஓவர் வரை முயற்சி செய்வார்கள். அப்பொழுதும் போட்டியை நடத்த முடியவில்லை என்றால் டேபிள் டாப்பர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி டெபிளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com