சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்x

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20| அதிக பவுண்டரிகள்? அதிக சிக்சர்கள்? பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

சர்வதேச மாஸ்டர்ஸ் டி20 லீக்கின் முதல் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ், லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது.
Published on

சர்வதேச மாஸ்டர்ஸ் டி20 லீக் என்ற கிரிக்கெட் தொடரானது முதல் சீசனாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய 6 நாடுகளின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன், ஜாண்டி ரோட்ஸ், கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் முதலிய பல்வேறு சாம்பியன் வீரர்கள் தங்களுடைய திறமையை மீண்டும் மீட்டுஎடுத்துவந்தனர்.

IMLT20 Champions INDIA MASTERS
IMLT20 Champions INDIA MASTERSpt

பரபரப்பாக நடந்த தொடரில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் இறுதிப்போட்டியை எட்டின. ராய்பூரில் நடைபெற்ற கோப்பைக்கான போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி முதல் கோப்பையை கைப்பற்றியது இந்தியா மாஸ்டர்ஸ் அணி. 74 ரன்கள் அடித்த அம்பத்தி ராயுடு ஆட்டநாயகனாக விளங்கினார்.

எவ்வளவு பரிசுத்தொகை?

ரசிகர்கள் தங்களுடைய குழந்தைப்பருவ கிரிக்கெட் ஹிரோக்களை பார்க்க மைதானத்தில் குவிந்தனர். இந்த தொடர் முழுவதும் அனைத்து 6 நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களும் நினைவில் வைத்துக்கொள்ளும் படியான பல சுவாரசியமான விசயங்கள் நடந்தன.

ஷேன் வாட்சனின் 3 சதங்கள், சிம்மன்ஸின் மிரட்டலான சதம், ரவி ராம்பாலின் பெஸ்ட் ஸ்பெல், ஜாண்டி ரோட்ஸ் களத்தில் மிரட்டலான ஃபீல்டிங், சச்சின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தென்னாப்பிரிக்க பவுலர் தஷபலால, குமார் சங்ககராவின் மாஸ்டர்கிளாஸ் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங், யுவராஜ் சிங்கின் அசத்தலான சிக்ஸ் ஹிட்டிங் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் கவர் டிரைவ் போன்ற பல மறக்க முடியாத சம்பவங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.

வின்னர் பரிசுத்தொகை: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கோப்பை வென்ற இந்தியாவிற்கு பரிசுத்தொகையாக ரூ.1 கோடி வழங்கப்பட்டது.

ரன்னர் பரிசுத்தொகை: இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.

மற்ற விருதுகள்..

போட்டிக்கான விருதுகள்

பாங்க் ஆஃப் பரோடா மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆஃப் தி மேட்ச் - அம்பதி ராயுடு (9 பவுண்டரிகள்) - ரூ. 50,000

போட்டியில் அதிக சிக்ஸர்கள் - அம்பதி ராயுடு (3 சிக்ஸர்கள்) - ரூ. 50,000

கேம் சேஞ்சர் - ஷாபாஸ் நதீம் (4 ஓவர்களில் 2/12)

குறைவான எகானமி பவுலர் - ஷாபாஸ் நதீம் (எகானமி 3.00)

ஆட்ட நாயகன் - அம்பதி ராயுடு (50 பந்துகளில் 74 ரன்கள்) - ரூ. 50,000

ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன்x

தொடருக்கான விருதுகள்

2025 IMLடி20 சீசனில் அதிக பவுண்டரிகள் - குமார் சங்கக்கார - 38 பவுண்டரிகள் (ரூ. 500,000)

2025 IMLடி20 சீசனில் அதிக சிக்ஸர்கள் - ஷேன் வாட்சன் - 25 சிக்ஸர்கள் (ரூ. 500,000)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com