மும்பைக்கு எதிரான சூப்பர் வெற்றி: போட்டிக்கு பின் என்ன சொன்னார் தோனி?

ஷிவம் துபே 18 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி 2 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
MS Dhoni
MS DhoniPTI

இன்னமும் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று மும்பைக்கு எதிரான வெற்றிக்கு பின்பு சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சிஎஸ்கே - மும்பை அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. 140 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சிஎஸ்கே 17.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக டேவன் கான்வே 42 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சேர்த்தார்.

CSK
CSKPT DESK

ஷிவம் துபே 18 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி 2 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வீரர்கள் மிகவும் நிதானமாக விளையாடி வெற்றியை பதிவு செய்தனர். இந்தப் போட்டியிலும் டேவான் கான்வே விளையாடிய விதம் சென்னை ரசிகர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

வெற்றிக்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி "இது முக்கியமான போட்டி என நன்றாக தெரியும். ஏனென்றால் நாங்கள் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடத்துக்குள் இருந்தோம். இந்த வெற்றி ஒரு சொகுசான நிலையில் இருக்கும் உணர்வை இப்போது தரும். ஆனால் நாங்கள் இன்னும் சில போட்டிகளில் விளையாட வேண்டும் அதில் எப்படி வேண்டுமானால் நடக்கலாம். உண்மையை சொல்லவேண்டுமென்றால் நான் இன்று குழப்பத்தில் இருந்தேன்" என்றார்.

தோனி, பதிரானா
தோனி, பதிரானாfile image

மேலும் பேசிய அவர் " இன்று மழை வர வாய்ப்பிருப்பதால் ஏற்பட்ட குழப்பம் அது. இரண்டாவதாக பேட்டிங் செய்தோம். மும்பை இந்தியன்ஸ் முதல் பேட்டிங் ஆடுவதையே விரும்பினோம். இதுவரை சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம். அனைத்து வீரர்களுமே முக்கிய பங்களிப்பை அவ்வப்போது அளித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் சில முன்னேற்றங்கள் இருந்திருக்கின்றன. கடந்த போட்டிகளில் சின்ன சின்ன சொதப்பல் இருந்திருக்கின்றன. இப்போது எஞ்சிய போட்டிகளில் சிறப்பாக விளையாடி முடிக்க வேண்டும்" என்றார் தோனி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com