‘தோனி பயன்படுத்திய ட்ரிக்...’ அடுத்த பந்திலேயே ஜட்டுவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டான ஹர்திக் பாண்ட்யா!

நேற்றைய போட்டியில் களத்தில் தோனி பயன்படுத்திய ஃபீல்டிங் ட்ரிக்கால், தீக்ஷனா பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்த வீடியோ வைரலாகி வருகிறது.
CSKvsGT
CSKvsGTPandya's dismissal

கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக 10 ஐபிஎல் அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்று வந்த லீக் சுற்று போட்டிகள், கடந்த 21-ம் தேதியுடன் முடிவடைந்தன. இதனையடுத்து, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் குவாலிஃபயர் போட்டி, சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்தது. இந்தப் போட்டியில், சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

CSKvsGT
CSKvsGTR Senthil Kumar, PTI

குவாலிஃபயர் 1 போட்டியில் தோல்வியடைந்தாலும், இன்று நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் குஜராத் அணி வரும் வெள்ளிக்கிழமை மோதுகிறது. இந்நிலையில், குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட்டை வீழ்த்த, தோனி களத்தில் சரியாக கணித்து ஃபீல்டிங்கை மாற்றிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக அவர் ஃபீல்டிங்கை மாற்றிய அடுத்த பந்திலே ஹர்திக் பாண்ட்யா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த வீடியோவை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

அந்த வீடியோவின்படி, 5 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. ஷுப்மன் கில் 19 ரன்களுடனும், கேப்டன் பாண்ட்யா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 6-வது ஓவரில் ஸ்பின்னரான தீக்ஷானாவை பந்துவீச அழைத்தார் தோனி. அப்போது தீக்ஷனா வீசிய முதல் பந்தில் பாண்ட்யா ஒரு ரன்னும், இரண்டாவது பந்தில் ஷுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் இருந்தார். பின்னர், 3-வது பந்தில் ஷுப்மன் கில் ஒரு ரன்கள் எடுத்த நிலையில், 4-வது பந்தில் ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமல் இருந்தார்.

பின்னர் 5-வது பந்தில் பவுண்டரி அல்லது சிக்ஸ் எடுக்கும் வகையில், பீல்டர்கள் எங்கெங்கு நிற்கிறார்கள் என்று ஸ்டிரைக்கில் இருந்த ஹர்திக் பாண்ட்யா பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, தோனி பேக்வேர்டு ஸ்கொயரில் இருந்த ஜடேஜாவை, பேக்வேர்டு பாயிண்ட்டுக்கு (from the leg side to the off side) வர சொல்லியதும் ஓடிவந்து அங்கு நின்றார் ஜடேஜா. இதனைத் தொடர்ந்து, தீக்ஷனா வீசிய 5-வது பந்தில் சரியாக ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஹர்திக் பாண்ட்யா வெளியேறினார். வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரியும், ஹர்திக்கின் ஈகோவுடன் தோனி விளையாடியுள்ளார் என்றே தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நேற்றைய போட்டிக்குப் பின்பு ஃபீல்டர்களை அடிக்கடி மாற்யிது குறித்து கேட்டபோது, “என்னைப் பார்த்தால் மிகவும் எரிச்சலூட்டும் கேப்டனாக தெரியும். ஏனெனில், போட்டியின் தன்மைக்கு ஏற்ப 2-3 அடிக்கு ஃபீல்டர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பேன். ஃபீல்டர்களிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள் என்னவெனில், என் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அது.

MS Dhoni
MS Dhoni@ChennaiIPL

ஃபீல்டர்கள் கேட்ச்சை தவறவிட்டாலும், என்னிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இருக்காது, எனினும் என் மீது கவனம் வைத்திருங்கள் என்றே சொல்வேன்” என்று கூறியிருந்தார். இதேபோல், ஹர்திக் பாண்ட்யா பேசிய போதும், தோனி அடிக்கடி பவுலர்களை மாற்றியதே சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com