”சண்டையை ட்ரெஸிங் ரூமோட நிறுத்திக்கணும்; களத்தில்..”: கோலி - காம்பீர் மோதல் குறித்து சேவாக் விளாசல்!

விராட் கோலி மற்றும் கெளதம் காம்பீர் மோதல் விவகாரம் வைரலான நிலையில், இனி, இது போன்ற தவறுகள் நடந்துவிடாமல் இருக்க பிசிசிஐ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
virat, gambhir, sehwag
virat, gambhir, sehwagtwitter page

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

ஐபிஎல் திருவிழா, சாதனைகளுக்கு மட்டுமல்ல... சண்டைகளுக்கும் பெயர்போனது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது, விராட் கோலி - கெளதம் காம்பீர் மோதல் விவகாரம்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில், 43வது லீக் போட்டி, லக்னோவில் கடந்த மே மாதம் 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சந்தித்துக் கொண்டன. இந்தப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி லக்னோவை வீழ்த்தியது. அந்தப் போட்டியின்போதே, லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக்கிற்கும், கோலிக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது.

பின்னர், போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொண்டபோது பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கும் லக்னோ அணி ஆலோசகரும் டெல்லி எம்பியுமான கெளதம் காம்பீருக்கும் வார்த்தை மோதல் வெடித்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலும் ஆயின. இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த விஷயத்தில் போட்டி விதிகளை மீறிய விராட் மற்றும் காம்பீர் ஆகிய இருவருக்கும் ஐபிஎல் நிர்வாகம் 100 சதவீதம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. என்றாலும், இந்தப் பிரச்னை பேசுபொருளாகி வருகிறது.

தற்போது இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், “போட்டி முடிந்த பிறகு நான் தொலைக்காட்சியை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு படுக்கச் சென்றுவிட்டேன். அடுத்த நாள் சமூக வலைதளங்களில் பார்த்தபிறகு இந்த விவகாரம் குறித்து தெரிந்து கொண்டேன். விராட் கோலி - கம்பீர் இடையே களத்தில் நடந்த மோதல் சரியல்ல. தோற்றவர்கள் அமைதியாகத் தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும். வெற்றி பெற்ற அணியினர் சில நேரங்களில் இப்படித்தான் கொண்டாடுவார்கள்.

அதற்காக ஏன் வார்த்தைப் போரில் ஈடுபட வேண்டும்? இவர்கள் இருவரும் இந்தியாவின் அடையாளங்கள். இதுபோன்ற செயல்களால் இவர்களை பின்தொடரும் பல கோடி இளைஞர்கள், சிறார்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஏற்கனவே இதுபோன்று பலமுறை நடந்திருக்கிறது. பிசிசிஐ, இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆரம்பத்திலேயே தடை செய்திருந்தால் மற்றவர்கள் இதுபோல் செய்வதற்கு யோசிப்பார்கள். பொதுவாக வீரர்கள் சண்டையை ட்ரெஸ்ஸிங் ரூமில் வைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் மைதானத்தில் பலரும் இருக்கும்போது அதை நிகழ்த்திக் காட்டினால், அது விளையாட்டுக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்காது. இனி, இது போன்ற தவறுகள் நடந்துவிடாமல் இருக்க பிசிசிஐ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com