
தன்னைப் பற்றி வெளியாட்கள் யார் என்ன சொன்னாலும் அது குறித்து தாம் கவலைப்படவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஐதராபாத் அணியில் கிளாசென் மிகச் சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 104 ரன்களை விளாசினார். இதில் 6 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். பின்பு களமிறங்கிய பெங்களூரு அணியின் கோலி மற்றும் டூபிளசிஸ் அதரிடியாக விளையாடினர். இதில் கோலி 62 பந்துகளில் சதமடித்து ஐதராபாதின் வெற்றியை தடுத்தார். இதனால் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
இந்தப் போட்டிக்கு பின் பேசிய கோலி "நான் நம்பர்களை பார்ப்பதில்லை. நான் ஏற்கெனவே நிறைய அழுத்தத்தில் வைத்துக்கொள்கிறேன். இந்த 6 ஆவது சதமடிப்பது மகிழ்ச்சிதான். ஆனால் சமயங்களில் எனக்கு நானே நிறைய பாராட்டுகளை எடுத்துக் கொள்வதில்லை. மேலும், வெளியே இருப்பவர்கள் என்ன சொன்னாலும் அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. அது அவர்களுடைய கருத்து. போட்டியை எப்படி வெற்றியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அதை நான் பல ஆண்டுகளாக செய்துக்கொண்டு இருக்கிறேன். போட்டியின் சூழலுக்கு ஏற்ப விளையாடுவே நான் பெருமையாக கருதுகிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர், "புதிய புதிய ஃபேன்ஸி ஷாட்களை ஆடும் பேட்ஸ்மேன் அல்ல நான். நாங்கள் ஒரு ஆண்டின் 12 மாதங்களிலும் கிரிக்கெட் விளையாடுகிறோம். அதனால் வித்தியாசமான ஷாட்களை விளையாடி, விக்கெட்டை பறிகொடுக்க விரும்பவில்லை. ஐபிஎல் தொடருக்கு பின் எங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டி உள்ளது. அதனால் நான் எப்போதுமே என் கிரிக்கெட் டெக்னிக்படியே விளையாட விரும்புகிறேன். அப்போதுதான் என்னால் என் அணிக்கு வெற்றியை தேடி தர முடியும்" என்றார் விராட் கோலி.