‘வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்!’- சாம்பியன் விராட் கோலியின் அசாத்திய சதங்கள் சொல்லும் பாடம்!

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.
Virat Kohli
Virat Kohli Facebook

நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு, பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த விராட் கோலி தனி ஆளாக நின்று போராடி 61 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார்.

Virat Kohli
Virat Kohli Facebook

இதில் 13 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். விராட் கோலியின் ஆட்டத்தால் ஆர்.சி.பி. அணி 197 ரன்கள் சேர்த்தது. இலக்கை துரத்திய குஜராத் அணியில் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். இந்த அபார ஆட்டத்தின் மூலம் குஜராத் அணி வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.

Virat Kohli
RCB vs GT | ‘ஈ சாலா கப்...’ Endgame-ல் இம்முறையும் கலைந்துபோனது ஆர்.சி.பியின் கோப்பைக் கனவு!

அணி தோல்வி அடைந்தாலும் விராட் கோலி ஆடிய விதத்தினால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்! போராடுறோமா என்பதுதான் முக்கியம். அந்த வகையில் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய கடைசி லீக் போட்டியில் தான் ஒரு வீரன் என்பதை, தன் அசாத்திய சதத்துடன் பதிவுசெய்தார் விராட் கோலி. நேற்று பதிவு செய்த சதத்துடன் சேர்த்து ஐபிஎல்-ல் மொத்தமாக 7 சதங்களை பதிவு செய்துள்ளார் கோலி.

இதன் மூலம் கிறிஸ் கெயிலின் சாதனையை கோலி தகர்த்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் 6 சதம் அடித்த நிலையில், தற்போது விராட் கோலி 7 சதம் அடித்திருக்கிறார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 5 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நடப்பு சீசனில் விராட் கோலி 14 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். அதன் மூலம் 639 ரன்களை அவர் பதிவு செய்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 53.25. இதில் 65 பவுண்டரி மற்றும் 16 சிக்ஸர்களை அவர் பதிவு செய்துள்ளார். 2 சதம் மற்றும் 6 அரை சதங்கள் இதில் அடங்கும். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக கடந்த 2008 சீசன் முதல் நடப்பு சீசன் வரையில் 7,263 ரன்கள் குவித்துள்ளார் கோலி.

Virat Kohli
Virat Kohli Facebook

அதன் மூலம் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாகவும் அவர் உள்ளார். 50 அரை சதங்கள் மற்றும் 7 சதங்களை கோலி இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளார். 2016 சீசனில் 4 சதங்கள், 2019 சீசனில் 1 சதம் மற்றும் 2022 சீசனில் 2 சதங்கள் என மொத்தம் 7 சதங்களை பதிவு செய்துள்ளார் கோலி எனும் பேரரசன்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com