வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷிcricinfo

”அந்த பையனுக்கு பயம் கிடையாது” 14 வயதில் சாதனை சதம்! ‘வைபவ் சூர்யவன்ஷி’ பேர குறிச்சு வச்சுக்கோங்க!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 17 பந்தில் அதிவேக அரைசதமடித்து 14 வயது வைபவ் சூர்யவன்ஷி அசத்தியுள்ளார்.
Published on

2025 ஐபிஎல் சீசனானது பாதி கடலை தாண்டிவிட்டது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் 6 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அசத்தியுள்ளன.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடிவருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

209 ரன்கள் குவித்த குஜராத் டைட்டன்ஸ்..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் வழக்கம்போல நிதானமான ஆட்டத்தை விளையாடிய பிறகு, அதிரடியான பேட்டிங்கிற்கு திரும்பினர். சாய் சுதர்சன் 9 ரன்னில் இருந்தபோது கைக்கு வந்த கேட்ச்சை கோட்டைவிட்டார் ஹெட்மயர்.

அதற்குபிறகு எந்த வாய்ப்பையும் வழங்காத இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்து அசத்தினர். சாய் சுதர்சன் 39 ரன்னில் வெளியேற, 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய சுப்மன் கில் 84 ரன்கள் அடித்து வெளியேறினார்.

கடைசிவரை களத்திலிருந்த ஜோஸ் பட்லர் 26 பந்தில் அரைசதமடித்து அசத்த 20 ஓவரில் 209 ரன்களை குவித்தது குஜராத் டைட்டன்ஸ்.

35 பந்தில் சதமடித்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி!

210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வானவேடிக்கை காட்டினர்.

தொடக்கம் முதலே சிக்சர் பவுண்டரி என மைதானத்தை சுற்றிக்காட்டிய வைபவ் சூர்யவன்ஷி 11 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என சிக்சர் மழை பொழிந்து வெறும் 35 பந்தில் சதமடித்து அசத்தினார்.

மறுமுனையில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட ஜெய்ஸ்வால் 31 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் வைபவ் சூர்யவன்ஷி 101 ரன்னில் அவுட்டாகி வெளியேற, 12.3 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் அடித்து விளையாடிவருகிறது ராஜஸ்தான் அணி.

உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

14 வயதில் டி20 சதமடித்து அசத்திய வைபவ் சூர்யவன்ஷி, டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதமடித்த முதல் உலக வீரராக உலக சாதனை படைத்துள்ளார்.

குறைந்த வயதில் டி20 சதம்:

* வைபவ் சூர்யவன்ஷி - 14 வயது 32 நாள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - 2025

* விஜய் ஜோல் - 18 வயது 118 நாள் - மகாராஷ்டிரா vs மும்பை - 2013

* பர்வேஸ் ஹொசைன் - 18 வயது 179 நாள் - மோன் பாரிஷால் vs ராஜ்ஷாஹி - 2020

* குஸ்டாவ் மெக்கியோன் - 18 வயது 280 நாள் - பிரான்ஸ் vs சுவிட்சர்லாந்து - 2022

ஐபிஎல்லில் வரலாற்று சாதனைகள்!

அதிவேக சதம்:

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல்லில் அதிவேக சதம் விளாசியவர்கள்:

* கிறிஸ் கெய்ல் - 30 பந்து - RCB vs PWI - பெங்களூரு - 2013

* வைபவ் சூர்யவன்ஷி - 35 பந்து - RR vs GT - ஜெய்ப்பூர் 2025

* யூசுப் பதான் - 37 பந்து - RR vs MI - மும்பை - 2010

* டேவிட் மில்லர் - 38 பந்து - PBKS vs RCB - மொஹாலி - 2013

குறைவான வயதில் சதம், அரைசதம்:

ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் மற்றும் அரைசதம் விளாசிய ரியான் பராக் சாதனையை உடைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.

குறைந்த வயதில் ஐபிஎல் அரைசதம்:

* வைபவ் சூர்யவன்ஷி - 14 வயது 32 நாள்

* ரியான் பராக் - 17 வயது 175 நாள்

* சஞ்சு சாம்சன் - 18 வயது 169 நாள்

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால் 15.5 ஓவரிலேயே 212 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com