ஐபிஎல் பிளேஆஃப் டிக்கெட் விற்பனை
ஐபிஎல் பிளேஆஃப் டிக்கெட் விற்பனைweb

ஐபிஎல் 2025| பிளேஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடக்கம்!

2025 ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் சுற்றுகளுக்கு ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தகுதிபெற்று அசத்தியுள்ளன.
Published on

18வது சீசனாக 2025 ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி முதல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. 10 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்திவந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

4 அணிகளின் இங்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், எந்த அணி யாருடன் மோதப்போகிறது, புள்ளிப்பட்டியலில் எந்த இடத்தில் முடிக்கப்போகிறது என்பதற்கான இறுதிசுற்று லீக் போட்டிகள் நடந்துவருகின்றன.

பிசிசிஐ, ஐபிஎல்
பிசிசிஐ, ஐபிஎல்எக்ஸ் தளம்

இந்த சூழலில் 2025 ஐபிஎல் தொடருக்கான பிளேஆஃப் போட்டிகளின் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட உள்ளது.

நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்..

2025 ஐபிஎல் தொடருக்கான பிளேஆஃப் போட்டிகள்,

மே 29 - குவாலிஃபையர் 1

மே 30 - எலிமினேட்டர்

ஜூன் 1 - குவாலிஃபையர் 2

ஜூன் 3 - இறுதிப்போட்டி

முதலிய தேதிகளில் நடைபெறவிருக்கும் நிலையில், இதன் டிக்கெட் விற்பனை நாளை மே 24 முதல் தொடங்கி மே 27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விற்பனையானது https://www.iplt20.com , https://www.district.in வலைதளங்களில் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com