Mmbai Indians
Mmbai IndiansTwitter

வரிசையா 5 போட்டில தோத்துட்டு கூட Qualify ஆவாங்க! இரண்டாவது பாதியில் தான் ’MI’ ஆட்டமே ஆரம்பிக்கும்!

5 முறை சாம்பியனாக ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த வருட ஐபிஎல்லில் அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற கேள்வி தற்போது அதிகமாக எழுந்துள்ளது.

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

அதிக வின்னிங் கன்வர்சன்-ரேட் வைத்திருக்கும் அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ்!

உலக கிரிக்கெட் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படும், விரும்பப்படும் ஒரு டி20 கிரிக்கெட் தொடர் என்றால், அது ஐபிஎல் தொடர் தான். அதிகளவு ரசிகர் பட்டாளத்தையும், வியாபாரத்தையும் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் சிறந்த அணி எதுவென்று கேட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என்ற இரண்டு அணிகளின் பெயர்கள் மாறிமாறி ரசிகர்களின் விருப்பமாக இருக்கும்.

MI - CSK
MI - CSKTwitter

இந்த 2 அணிக்கும் இடையேயான போட்டியில் அதிகமுறை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியிருக்கும் அணியாகவும், அதிகமுறை இறுதிப்போட்டியில் விளையாடியிருக்கும் அணியாகவும் முதலிடத்தில் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அந்த அணி 11 முறை அரையிறுதி சுற்றுக்கும், 9 முறை இறுதிப்போட்டிக்கும் முன்னேறி 4 முறை கோப்பையை வென்றுள்ளது.

MI - CSK
MI - CSKTwitter

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியானது 9 முறை அரையிறுதி சுற்றுக்கும், 6 முறை இறுதிப்போட்டிக்கும் முன்னேறி 5 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் விளையாடி ஒரேயொரு முறை மட்டுமே தோல்வியை சந்தித்து, அதிக கன்வர்சன்-ரேட் வைத்திருக்கும் அணியாக திகழ்கிறது மும்பை அணி.

3 முறை டேபிள் அடியிலிருந்து குவாலிஃபை ஆகியிருக்கும் மும்பை!

மும்பை இந்தியன்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடத்தை பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்ததை விட, 3 முறை ”அரையிறுதிக்குள் நுழையவே முடியாத இடத்தில்” இருந்து, கடைசிகட்ட போட்டிகளில் போராடி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததே இன்னும் சுவாரஸ்யமாக இருந்துள்ளது. சொல்லப்போனால் இந்த ஆட்டமுறையை தான், தொடர்ச்சியாக செய்துவருகிறது மும்பை இந்தியன்ஸ்.

MI
MITwitter

தொடரின் முதல் பாதியில் பொதுவாக, 4 முதல் 5 போட்டிகளில் தோல்வியையே சந்தித்து, அவ்வளோ தான் மும்பை எல்லாம் பந்தயத்துலயே இல்லை எனும் ஒரு பிம்பத்தை கட்டமைக்கும். அதுவும் முதல் போட்டியை எடுத்துக்கொண்டால் சொல்லவே தேவையில்லை, அதில் அதிகமுறை தோல்விதான். ”இந்த சீசன் முதல் போட்டில தோத்துட்டாங்க, அப்போ கப் நமக்கு தான்”னு எதிரணி ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு மும்பை ஒரு சாதாரண ஆட்டத்தையே விளையாடி இருக்கிறது. இது தொடரின் முதல் பாதிக்கு முழுமையாக தொடரும். ஆனால் தொடரின் பிற்பாதியில் அப்படியே வேற ஒரு அணியாக மாறி, எதிர்கொள்ளும் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து தொடர் வெற்றிகளை பதிவுசெய்து மிரட்டிவிடும். “எங்க ஆட்டமே பிற்பாதில தான் ஆரம்பிக்கும்” என சொல்லும் அளவிற்கு தொடர்ச்சியாக 6 போட்டிகளில் கூட வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது மும்பை அணி.

5 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியுற்று, அரையிறுதிக்குள் நுழைந்த ஒரே அணி மும்பை தான்!

2014 ஐபிஎல் தொடரை எந்த ஒரு மும்பை இந்தியன்ஸ் ரசிகராலும் மறக்கவே முடியாது. அந்தளவுக்கு அந்தவருடம் தங்கள் ரசிகர்களுக்கு, மறக்கமுடியாத சீசனையும் நினைவுகளையும் தந்தது மும்பை அணி. சீசனின் முதல்பாதியில் ஒன்றல்ல இரண்டல்ல... 2014 ஐபிஎல் தொடரில், தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது மும்பை அணி. அத்தனை ட்ரோல்கள், அத்தனை விமர்சனங்கள் என பல்வேறு சோதனைகளை சந்தித்திருந்தனர் மும்பை ரசிகர்கள். ஆனால் தொடரின் பிற்பாதியில் மும்பை ஒரு மேஜிக்கையே செய்திருந்தது. கடைசி 6 போட்டிகளில் 5 போட்டியில் வெற்றிபெற்று, அரையிறுதிக்குள் கடைசி அணியாக நுழைந்து கெத்துகாட்டியது மும்பை அணி.

MI vs RR
MI vs RRTwitter

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், மும்பை அணிக்கும் இடையேயான அந்த போட்டியை இன்று நினைத்தால் கூட கண்முன்னால் வந்து போகும். நிச்சயம் ராஜஸ்தான் தான் அரையிறுதிக்குள் நுழைய வேண்டிய இடத்தில் இருந்தது. ஆனால் கடைசி வாய்ப்பிற்காக ‘முடிந்தளவு போராடித்தான் பார்ப்போமே’ என முடிவு செய்ய நினைத்த மும்பை அணிக்கு, அரையிறுதிக்குள் நுழைய 87 பந்துகளில் 190 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற இமாலய இலக்கு வைக்கப்பட்டது.

MI vs RR
MI vs RRTwitter

அதை எந்த அணியாவது செய்யும் என்ற நாமே யோசித்துக்கூட பார்த்திருக்க மாட்டோம்... அந்த போட்டியின் முடிவை பார்க்கும் வரை. கோரி ஆண்டர்சனின் அபாரமான ஆட்டமும், கடைசி நேரத்தில் சிக்சரை பறக்கவிட்டு ஆதித்ய தாரே டீசட்டை கழட்டிவிட்டு ஓடிவந்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது. இப்படி அந்த சீசனில், ஒரு நம்ப முடியாத இடத்தில் இருந்து அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி.

2023 ஐபிஎல் தொடரின் அரையிறுதிக்குள் நுழையும் பந்தயத்தில் மும்பை அணியும் சேர்ந்துள்ளது!

இந்த 2023 தொடரிலும் முதல் இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்து, பல்வேறு விமர்சனங்களை கண்டது MI. ஆனால் எப்போதும் போலான அவர்களது பிற்பாதி ஐபிஎல் ஆட்டத்தால், தற்போது அரையிறுதி பந்தயத்திற்குள் நுழைந்து அசத்தியுள்ளனர். 173, 186, 213, 215 என அடுத்தடுத்து 4 போட்டிகளில் வெற்றிகரமான சேஸிங்கை துரத்தியிருக்கும் எம்ஐ, தங்களது பழைய ஆட்டத்திற்கு திரும்பி, மும்பை ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.

Mumbai indians
Mumbai indians

மீதமிருக்கும் 5 போட்டிகளில் 4 அல்லது 3ல் வெற்றிபெற்றாலே பந்தயத்தில் முக்கியமான இடத்தில் தன்னை நிலைநிறுத்தி கொள்ளும் மும்பை. மீண்டும் ஒரு “MI vs” அரையிறுதிபோட்டியை, இந்த ஐபிஎல்லிலும் பார்க்கும் வாய்ப்பு நிச்சயம் பிரகாசமாகவே இருக்கிறது என சொல்லலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com