ஐபிஎல் போட்டிகளில் எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கிய ’வள்ளல்’ அணிகள் எதெல்லாம் தெரியுமா?

ஐபிஎல் சீசனில், அதிக எக்ஸ்ட்ரா ரன்கள் எடுத்த அணியாக கொல்கத்தா முதலிடத்தில் தொடருவதுடன், அந்தச் சாதனை இன்னும் முறியடிக்கப்படாமலும் உள்ளது.
ஐபிஎல்
ஐபிஎல்file image

இறுதிப்பந்து வரை ரசிகர்களை இருக்கை நுனியில் அமரவைக்கும் இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இந்த சீசனும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. அந்தவகையில் இந்த சீசனிலும் சில சாதனைகள் தகர்க்கப்பட்டும், படைக்கப்பட்டும் வருகின்றன. அதேநேரத்தில், ஐபிஎல்லின் இன்னும் சில சாதனைகள் தகர்க்கப்படாமலும் உள்ளன. அந்த வகையில், ஐபிஎல் சீசனில், அதிக எக்ஸ்ட்ரா ரன்கள் எடுத்த அணியாக கொல்கத்தா முதலிடத்தில் தொடருவதுடன், அந்தச் சாதனை இன்னும் முறியடிக்கப்படாமலும் உள்ளது.

நடப்பு சீசனில் எக்ஸ்ட்ரா ரன்கள்!

நடப்பு சீசனில், எக்ஸ்ட்ரா ரன்கள் வழங்கப்படுவதாக கேப்டன்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் அதையும் மீறி பந்துவீச்சாளர்கள் ரன்களை தாரை வார்க்கின்றனர். இது, அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் கேப்டன் ஒரு போட்டியிலிருந்து விலகுவதற்கும் வழிவகுக்கிறது. சமீபத்தில்கூட, நடப்பு சீசனில் சென்னை அணி தாம் விளையாடிய 5 போட்டிகளிலும் எக்ஸ்ட்ரா ரன்களை எதிரணிகளுக்கு வழங்கியுள்ளது.

MS Dhoni
MS DhoniPTI

இதுகுறித்து கேப்டன் தோனியும், தனது அணி பந்துவீச்சாளர்களுக்கு எச்சரித்திருந்தார். இவருடைய கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் பேட்டர் வீரேந்திர சேவாக்கும் ஆதரவு தெரிவித்திருந்ததுடன், ஆலோசனையும் கூறியிருந்தார்.

ஐபிஎல்
“எக்ஸ்ட்ராவாகப் பந்துவீசி தோனிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள்” - சேவாக் அறிவுரை

‘அதிக’ எக்ஸ்ட்ரா ரன்களைப் பெற்ற அணி!

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில், அதிக எக்ஸ்ட்ரா ரன்கள் எடுத்த அணியாக கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது.

* கடந்த 2008ஆம் ஆண்டு கொல்கத்தா அணி அதிகபட்சமாக 28 ரன்களை எக்ஸ்ட்ராகவாக எடுத்துள்ளது. அந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக டெக்கான் சார்ஜர்ஸ் அணி 28 ரன்களை எக்ஸ்ட்ராவாக வாரி வழங்கியுள்ளது.

அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. அதில் டெக்கான் சார்ஜர்ஸ் வழங்கிய 28 ரன்களும் அடக்கம். பின்னர் ஆடிய டெக்கான் 18.4 ஓவர்களுக்கு 110 ரன்களில் ஆட்டமிழந்தது.

Kolkata Knight Riders
Kolkata Knight Ridersfacebook

* அதிக எக்ஸ்ட்ரா ரன்கள் பெற்ற இந்தப் பட்டியலில் பஞ்சாப் அணி 2வது இடம்பிடித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு பெங்களூரு அணி, பஞ்சாப்புக்கு 27 ரன்களை தாரை வார்த்தது.

* அதிக எக்ஸ்ட்ரா ரன்கள் பெற்ற இந்தப் பட்டியலில், 3வது இடத்தில் சென்னை அணி உள்ளது. சென்னை அணிக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மும்பை அணி 26 ரன்களை வழங்கியுள்ளது. இதே ரன்களை 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு, பெங்களூரு அணியும், 2015ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு ராஜஸ்தான் அணியும் வழங்கியுள்ளன.

‘அதிக’ முறை எக்ஸ்ட்ரா ரன்களைப் பெற்ற அணிகள்!

* ஐபிஎல் சீசனில் அதிக முறை எக்ஸ்ட்ரா ரன்களைப் பெற்ற அணிகளாக கொல்கத்தாவும், மும்பையும் முதல் இடத்தில் உள்ளன. அவையிரண்டும் 9 முறை எக்ஸ்ட்ரா வகையில் ரன்களைப் பெற்றுள்ளன. இதில் கொல்கத்தா 28 ரன்களையும், மும்பை 25 ரன்களையும் அதிகமாகப் பெற்றுள்ளன.

* அதைத் தொடர்ந்து 2வது இடத்தில் சென்னை அணி உள்ளது. அது, 6 முறை எக்ஸ்ட்ரா வகையில் ரன்களைப் பெற்றுள்ளது.

* அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி 5 முறை பெற்றுள்ளது.

அதிகமுறை எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கிய அணிகள்!

* ஐபிஎல் தொடரில் அதிகமுறை எதிரணிகளுக்கு எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கிய பட்டியலில் மும்பை அணியும், பெங்களூரு அணியும் முதலிடம் பிடித்துள்ளன. அவை இரண்டும் தலா 8 முறை வழங்கியுள்ளன.

ரோகித்சர்மா, விராட் கோலி
ரோகித்சர்மா, விராட் கோலிfile image

* இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் கொல்கத்தா அணி உள்ளது. அது, 6 முறை வழங்கியுள்ளது.

* மூன்றாவது இடத்திலுள்ள சென்னை அணி 5 முறை வழங்கியுள்ளது.

அதிகமுறை எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கிய மைதானங்கள்!

ஐபிஎல் தொடரில், அதிக முறை எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கிய மைதானங்களாக ஜெய்ப்பூர், ஈடன் கார்டன், சென்னை உள்ளிட்டவை சாதனை பட்டியலில் இருக்கின்றன.

சேப்பாக்கம் மைதானம்
சேப்பாக்கம் மைதானம்file image

அந்த மைதானங்கள் தலா 6 முறை அதிக ரன்களை வாரி வழங்கியிருக்கின்றன. அடுத்த இடத்தில் டெல்லி மைதானம் உள்ளது. அது, 4 முறை வழங்கியுள்ளது.

ஐசிசியின் புதிய விதி சொல்வது என்ன?

ஐசிசியின் புதிய விதிப்படி, போட்டிகளில் ஓர் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காவிட்டால், முதல்முறை அந்த அணியின் கேப்டனுக்கு 12 லட்ச ரூபாய் அபராதமும், 2வது முறையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காவிட்டால் அந்த அணியின் கேப்டனுக்கு 24 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

3வது முறையும் அந்த அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காவிட்டால், அந்த அணியின் கேப்டன் அடுத்துவரும் ஒரு ஆட்டத்தில் விளையாட முடியாது. ஐசிசியின் இந்தப் புதிய விதியை மனதில்வைத்தே தோனி, தன் அணி பந்துவீச்சாளர்கள் எக்ஸ்ட்ரா வீசுவதை குறைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஒரு ரன்னை எடுப்பது கஷ்டம்; ஆனால் வழங்குவது சுலபம்’ என்பதை கருத்தில்கொண்டு பந்துவீச்சாளர்கள் பந்து வீசவேண்டும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com