"தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்" - சுரேஷ் ரெய்னா பகிர்ந்த முக்கியமான 'அப்டேட்'

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் 13 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறது.
Dhoni and Raina
Dhoni and RainaPT DESK

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

தோனிக்கு இந்த ஐபிஎல் சீசன் கடைசி கிடையாது, அவர் இன்னும் ஓராண்டுகாலம் விளையாடுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், சிஎஸ்கே ரசிகர்களின் சின்ன தலையான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் 13 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறது. மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டாலும், எந்த எந்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதை கணிக்கவே முடியாத அளவிற்கு ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றன. சிஎஸ்கே அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இன்னும் அந்த அணிக்கு 4 போட்டிகள் இருக்கிறது.

Dhoni
DhoniPT DESK

இந்த ஐபிஎல்தான் தோனியின் கடைசி தொடராக இருக்கும் என நினைத்த ரசிகர்கள், சிஎஸ்கே ஆடும் மைதானங்களில் மொத்தமாக குவிந்தனர். மேலும் சிஎஸ்கே எந்த மைதானத்தில் விளையாடினாலும், மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே 70 சதவீதம் காணப்படும் அளவிற்கு, தோனியை காண ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தையே சிஎஸ்கேவின் மஞ்சல் படை ஆக்கிரமித்தது.

அடுத்த சில தினங்களில் இந்த சீசன் நிறைவடைய இருப்பதால், தோனி திடீரென நிச்சயமாக விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்றே பலரும் பேசி வரும் நிலையில், சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தோனியுடனான சந்திப்புக்கு பின் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ள கருத்து வைரலாகி இருக்கிறது.

Suresh Raina
Suresh Rainapt desk

அதில் அவர் "சிஎஸ்கே அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துவிட்டு கூடுதலாக ஒரு வருடம் விளையாட திட்டமிட்டுள்ளேன்" என தோனி தன்னிடம் கூறியதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதை சொல்லிவிட்டு ரெய்னா சிரிக்க, ' அப்பவும் இதுவும் பொய் தானா' என கன்ஃப்யூசன் மோடில் சுற்றுகிறார்கள் சென்னை ரசிகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com