ஐபிஎல் 2023: காயம் காரணமாக SRH அணியில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் விலகல்!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தெரிவித்துள்ளது
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிட்விட்டர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், ஐபிஎல் தொடரில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், வாஷிங்டன் சுந்தர் 5 போட்டிகளில் பேட்டிங் செய்து 60 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் வலது கை சுழற்பந்துவீச்சாளரான வாஷிங்டன் சுந்தர், முதல் 6 போட்டிகளில் விக்கெட் எதுவும் எடுக்காத நிலையில், கடைசியாக டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி, 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

இந்தநிலையில், தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியப் போட்டிகளில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். இதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உறுதிப்படுத்தியுள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஹைதராபாத் அணிக்கு வாஷிங்டன் சுந்தர் விலகல் மேலும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com