SAvBAN | ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யுமா தென்னாப்பிரிக்கா... வங்கதேசத்துடன் மோதல்..!

யாருமே எதிர்பாராத வகையில் அசத்தலாகப் பந்துவீசிக்கொண்டிருக்கிறார் பார்ட்மேன். இதுவரை 8 ஓவர்கள் வீசி வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார்.
ottniel baartman | பார்ட்மேன்
ottniel baartman | பார்ட்மேன்Adam Hunger
போட்டி எண் 21: வங்கதேசம் vs தென்னாப்பிரிக்கா
குரூப்: டி
மைதானம்: நசௌ கவுன்டி இன்டர்நேஷனல் ஸ்டேடியம், நியூ யார்க்
போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 10, இந்திய நேரப்படி இரவு 8 மணி

உலகக் கோப்பையில் இதுவரை:

தென்னாப்பிரிக்கா: போட்டிகள் - 2, வெற்றிகள் - 2, தோல்வி - 0, புள்ளிகள் - 4
சிறந்த பேட்ஸ்மேன்: டேவிட் மில்லர் - 2 போட்டிகளில் 65 ரன்கள்
சிறந்த பௌலர்: ஆன்ரிக் நார்கியா - 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகள்
முதல் போட்டியில் இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி, அடுத்த போட்டியில் நெதர்லாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நெதர்லாந்துக்கு எதிராக தோல்வி பெற்றுவிடுவார்களோ என்று அஞ்சியிருந்த நிலையில், டேவிட் மில்லர் தனி ஒரு ஆளாகப் போராடி தன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இரண்டு போட்டிகளிலுமே எதிரணியை 110 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி பௌலிங் யூனிட்.

david Miller
david Miller Adam Hunger

வங்கதேசம்: போட்டி - 1, வெற்றி - 1, தோல்வி - 0, புள்ளிகள் - 2
சிறந்த பேட்ஸ்மேன்: தௌஹித் ஹிரதோய் - 1 போட்டியில் 40 ரன்கள்
சிறந்த பௌலர்: முஸ்தாஃபிசு ரஹ்மான் - 1 போட்டியில் 3 விக்கெட்டுகள்
வங்கதேச அணி இலங்கையை வீழ்த்தி தங்கள் உலகக் கோப்பையை சிறப்பாகத் தொடங்கியிருக்கிறார்கள். இலங்கையை 124 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய அந்த அணி, லிட்டன் தாஸ், ஹிரதோய் ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் போராடி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பலம், பலவீனம் என்னென்ன?

தென்னாப்பிரிக்கா: பௌலிங் சூப்பர், பேட்டிங் சுமார்
தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சில் பட்டையைக் கிளப்புகிறது. குறிப்பாக அவர்களின் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். பவர்பிளேவில் மார்கோ யான்சன், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் விக்கெட் வேட்டை நடத்தினால், மிடில் ஓவர்களில் நார்கியா தன் வேகத்தால் மிரட்டுகிறார். எல்லா ஏரியாவிலும் பயம் காட்ட சூப்பர் ஸ்டார் ககிஸோ ரபாடா வேறு! இப்படி 4 ஃபாஸ்ட் பௌலர்கள் நான்கு திசையில் இருந்தும் மிரட்டுகிறார்கள்.

ottniel baartman | பார்ட்மேன்
வருண் சக்ரவர்த்தி ஏன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதில்லை? காரணம் சொன்ன அபிஷேக் நாயர்

பௌலிங் பக்காவாக இருக்கும்போது அவர்களின் பேட்டிங் தான் சற்று கவலை தருவதாக இருக்கிறது. குறிப்பாக அவர்கள் டாப் ஆர்டர் மிகவும் சொதப்புகிறது. அவர்களின் டாப் பேட்ஸ்மேன்கள் குவின்டன் டி காக் (20 ரன்கள்), ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் (7 ரன்கள்), எய்டன் மார்க்ரம் (12 ரன்கள்) ஆகியோர் 2 போட்டிகளிலும் சேர்த்தே மொத்தம் 39 ரன்கள் தான் எடுத்திருக்கிறார்கள். அதுவும் மொத்தமாக 56 பந்துகளில். அதனால் இரண்டு போட்டிகளிலுமே ஒரு கட்டத்தில் அந்த அணி தடுமாறவே செய்தது. ஸ்டப்ஸ், கிளாசன், மில்லர் ஆகியோர் சற்று பொறுப்பாக ஆடியதால் 2 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது தென்னாப்பிரிக்கா. இந்தப் போட்டியில் அவர்களின் டாப் ஆர்டர் நன்கு செயல்படுவது மிகவும் அவசியம்.

வங்கதேசத்துக்கும் அதே பிரச்சனை தான்!
வங்கதேச அணிக்கும் தென்னாப்பிரிக்கா போன்ற அதே சிக்கல் தான். ஷகிப் அல் ஹசன் தவிர்த்து இலங்கைக்கு எதிராக எல்லோருமே சிறப்பாகப் பந்துவீசினர். ஆனால் பேட்டிங்கில் லிட்டன் தாஸ், தௌஹித் ஹிரதோய், மஹமதுல்லா ஆகியோரைத் தவிர்த்து யாருமே இரட்டை இலக்க ரன்களைத் தொடவில்லை. தென்னாப்பிரிக்காவின் பௌலிங் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், வங்கதேச பேட்ஸ்மேன்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியாகவேண்டும். அதிலும் குறிப்பாக பவர்பிளேவில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்வதும், ஓரளவு நல்ல ஸ்கோர் எடுப்பதும் மிகவும் முக்கியம்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்

தென்னாப்பிரிக்கா: குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹெய்ன்ரிக் கிளாசன், டேவிட் மில்லர், மார்கோ யான்சன், ககிஸோ ரபாடா, கேஷவ் மஹாராஜ், ஏன்ரிக் நார்கியா, ஓட்னீல் பார்ட்மேன்.

வங்கதேசம்: தன்சித் ஹசன், சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (கேப்டன்), தௌஹித் ஹிரதோய், ஷகிப் அல் ஹசன், மஹமதுல்லா, ரிஷாத் ஹொசைன், டஸ்கின் அஹமது, தன்சிம் ஹசன் ஷகிப், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்

தென்னாப்பிரிக்கா - ஓட்னீல் பார்ட்மேன்: யாருமே எதிர்பாராத வகையில் அசத்தலாகப் பந்துவீசிக்கொண்டிருக்கிறார் பார்ட்மேன். இதுவரை 8 ஓவர்கள் வீசி வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார். ஓவருக்கு வெறும் 2.5 ரன்கள்! 5 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார். பவர்பிளேவில் இவரை சமாளிப்பது வங்கதேசத்துக்கு பெரிய சவாலாக இருக்கும்.

வங்கதேசம் - முஸ்தாஃபிசுர் ரஹ்மான்: தென்னாப்பிரிக்காவின் மிடில் ஆர்டர் தான் அவர்களுக்கு நம்பிக்கையாக இருக்கும் நிலையில், அதற்கு மிகப் பெரிய பிரச்னையாக முஸ்தாஃபிசுர் ரஹ்மான் இருப்பார். மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் அவரை சமாளிப்பது எளிதல்ல.

கணிப்பு: தென்னாப்பிரிக்க அணி ஹாட்ரிக் வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com