IPL or PSL? எது சிறந்த டி20 லீக்? பாகிஸ்தான் நிரூபர் கேள்விக்கு இங்கிலாந்து வீரர் அதிரடி பதில்!
பாகிஸ்தானின் புகழ்பெற்ற டி20 லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக்கானது 2025 ஏப்ரல் 11-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10வது சீசனாக தொடங்கப்பட்ட தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட், கராச்சி கிங்ஸ், லாகூர் கலந்தர்ஸ், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் சல்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் முதலிய 6 அணிகள் கோப்பைக்கான பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சாம் பில்லிங்ஸ் இடம், செய்தியாளர் சந்திப்பின் போது ஐபிஎல்லை பாகிஸ்தான் லீக்கை ஒப்பிட்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பாகிஸ்தானில் இருந்தாலும் நேரமையாக பதிலளித்திருப்பது இணையத்தில் வைரலாகிவருகிறது.
அனைத்து டி20 லீக்குகளும் ஐபிஎல் போன்று விளையாடவே விரும்புகின்றன..
செய்தியாளர்களை சந்தித்த சாம் பில்லிங்ஸிடம், நீங்கள் ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் இரண்டிலும் விளையாடியுள்ளீர்கள், இதில் எது சிறந்த லீக் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குபதிலளித்து பேசிய சாம் பில்லிங்ஸ், “இந்த கேள்விக்கு நான் முட்டாள்தனமான பதிலை சொல்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இங்கிலாந்தில் நடந்துவரும் டி20 லீக் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் டி20 லீக் முதற்கொண்டு அனைத்துமே ஐபிஎல்லை போல நடத்தவேண்டும் என்ற முனைப்பில் தான் நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல்லை மற்ற லீக்குகளுடன் ஒப்பிடவே முடியாது, அனைத்துமே ஐபிஎல்லுக்கு அடுத்த இடத்தில் தான் இருக்கின்றன” என நேரடியாக பதிலளித்துள்ளார்.
இப்படி பிஎஸ்எல்லில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களிடம் ஐபிஎல்லை ஒப்பிட்டு கேள்விகள் எழுப்பப்படுவது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் டேவிட் வார்னரிடமும் ஐபிஎல் சார்ந்து கேள்வி எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.