ஒரே வீரராக 18 சிக்சர்கள்.. 41 பந்தில் 144 ரன்கள்! அதிவேக சர்வதேச டி20 சதமடித்து புதிய உலகசாதனை!

எஸ்டோனியாவை சேர்ந்த சாஹில் சவுகான் என்ற வீரர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 27 பந்தில் சதமடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
sahil chauhan
sahil chauhanx

எஸ்டோனியா மற்றும் சைப்ரஸ் இரண்டு அணிகளுக்கு இடையே 6 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற போட்டியில் சைப்ரஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய எஸ்டோனியா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இரண்டு அணிகளும் மோதிய இரண்டாவது போட்டி எபிஸ்கோபியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சைப்ரஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்களை குவித்தது.

sahil chauhan
’என் பயிற்சியாளர் வாழ்க்கையில் இப்படிஒரு மோசமான அணியை பார்த்ததில்லை..’ PAK-ஐ விளாசிய கேரி கிர்ஸ்டன்!

27 பந்தில் சதமடித்து உலக சாதனை!

192 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய எஸ்டோனியா அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சைப்ரஸ் அணி, 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது. டாப் ஆர்டர் வீரர்கள் நான்கு பேரும் 5, 1, 7, 3 என சொற்ப ரன்களில் வெளியேற 4 விக்கெட்டுகளை இழந்த எஸ்டோனியா அணி தடுமாறியது.

ஆனால் 4வது வீரராக களமிறங்கிய சாஹில் சவுகான் மட்டும் தனியொரு ஆடுகளத்தில் விளையாடுவது போல் விளையாடினார். ஓவருக்கு 2 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய சவுகான், வெறும் 27 பந்தில் 5 பவுண்டரிகள், 13 சிக்சர்கள் என துவம்சம் செய்து 105 ரன்கள் அடித்து அதிவேக டி20 சதத்தை பதிவுசெய்தார்.

அதற்குபிறகும் தன்னுடைய அதிரடியை நிறுத்தாத அவர், 41 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 18 சிக்சர்கள் என பறக்கவிட்டு பிரம்மிக்க வைத்தார். 144 ரன்களை குவித்து நாட் அவுட்டுடன் சவுகான் முடிக்க, வெறும் 13 ஓவரில் 194 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது எஸ்டோனியா.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 33 பந்துகளில் அடிக்கப்பட்டதே அதிவேக சதமாக இருந்துவந்த நிலையில், 27 பந்தில் உடைக்கவே முடியாது என கூறுமளவு ஒரு பிரம்மாண்டத்தை சாஹில் சவுகான் நிகழ்த்தியுள்ளார்.

sahil chauhan
தோனியின் வெளியேற்றம் உறுதி? தலைவன் வழியில் "கேப்டன்சி + விக்கெட் கீப்பிங்” செய்யும் ருதுராஜ்! #viral

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com